இயேசுவை நம்பி பற்றிக்கொண்டேன்

3 years ago
4

இயேசுவை நம்பி பற்றிக்கொண்டேன்
Blessed assurance, Jesus is mine

1. இயேசுவை நம்பி பற்றிக்கொண்டேன்
மாட்சிமையான மீட்பைப் பெற்றேன்
தேவ குமாரன் ரட்சை செய்தார்
பாவியாம் என்னை ஏற்றுக்கொண்டார்

இயேசுவைப் பாடிப் போற்றுகிறேன்
நேசரைப் பார்த்து பூரிக்கிறேன்
மீட்பரை நம்பி நேசிக்கிறேன்
நீடுழி காலம் ஸ்தோத்தரிப்பேன்

2. அன்பு பாராட்டிக் காப்பவராய்
எந்தனைத் தாங்கி பூரணமாய்
இன்பமும் நித்தம் ஊட்டுகிறார்
இன்னும் நீங்காமல் பாதுகாப்பார்

3. மெய்ச் சமாதானம் ரம்மியமும்
தூய தேவாவி வல்லமையும்
புண்ணிய நாதர் தந்துவிட்டார்
விண்ணிலும் சேர்ந்து வாழச் செய்வார்

Loading comments...