நவம்பர் 07 | நேர்மை | தினசரி தியானம்

13 days ago

நேர்மையில் ஒழுகுகிறவன் மறைத்து வைப்பதற்கு ஒன்றுமில்லை. திருட்டுத்தனமாய் அவன் எதையும் செய்வதில்லை. பொருந்தாத ஆசைக்கு அவன் அடிமைப்படுவதில்லையாதலால் அவன் யாருக்கும் அஞ்சுவதில்லை. ஏறுபோல் அவன் நடக்கிறான், நிமிர்ந்திருக்கிறான்; தெளிவுறப் பேசுகிறான்; நேரே முகத்தைப் பார்க்கிறான். அவனே நேர்மைக்கு விளக்கமாகிறான்.

Loading 1 comment...