நவம்பர் 06 | நீ ஏழையா? | தினசரி தியானம்

14 days ago

பொருள் குறைந்து போய்விட்டதினால் நீ ஏழையாய் விட்டாயா? ஏழ்மை பொருளைப் பொறுத்ததன்று. உடைமையில் வறியர் பலர் இருக்கின்றனர். மனவுறுதி படைத்திருப்பவன் ஏழையல்லன். கஷ்டதசையையும் மனவுறுதி ஒழுங்குப்படுத்தி விடுகிறது. கஷ்டகாலத்தை முன்னிட்டு மனம் தளர்வுறுபவன் ஏழை. அதை உறுதியுடன் சமாளிப்பவன் ஏழையல்லன்.

Loading comments...