ஆகஸ்ட் 12 | கஸ்தூரி மான் | தினசரி தியானம்

1 month ago
2

கஸ்தூரி மான் தனது உடலினின்று கஸ்தூரியை உண்டுபண்ணுகிறது. அதன் வாசனையை நாடி அது பிறகு உலகெலாம் தேடியலைகிறது. தான் தேடுவது தன்னிடத்தே இருப்பது அதற்குத் தெரியாது. மனிதன் வெளியுலகில் நாடுவதெல்லாம் அவனிடத்திலேயே இருக்கின்றன. எத்தனை ஜன்மாந்தரங்களில் உழன்றான பிறகு இவ்வுண்மையை அவன் கண்டு பிடிக்கிறான்! மனத்தகத்து மிளிரும் தெய்வத்தை அவன் கண்டுகொண்டால் உலகெங்கும் அதே தெய்வம் நிறைந்திருப்பதை அவன் உணர்வான்.

Loading 1 comment...