ஆகஸ்ட் 11 | ஆசிரியர் | தினசரி தியானம்

1 month ago
5

உலகம் என்னும் பள்ளிக்கூடத்தில் பல வகுப்புக்கள் இருக்கின்றன. ஒவ்வொரு வகுப்புக்கும் ஆசிரியன் உண்டு. புகட்டவேண்டிய பாடத்தைப் புகட்டுதற்கு ஆசிரியனுக்கு அதிகாரமுண்டு. ஆனால் ஆசிரியனுக்குப் பாடம் புகட்டும் அதிகாரமும், பாடத்தின் முறையை மாற்றும் அதிகாரமும் மாணாக்கனுக்கு இல்லை. ஓர் ஆசிரியனிடம் பாடம் கற்றான பிறகு மாணாக்கன் இன்னொரு ஆசிரியனிடம் அனுப்பப்படுகிறான். ஆசிரியனுக்கும் அப்படி அனுப்புதலில் மகிழ்ச்சி உண்டாகிறது. தரித்திரம், திருப்தி, கேடு. நலன், துன்பம், இன்பம் ஆகியவைகள் வாழ்க்கைக் கல்விக்குரிய ஆசிரியர்கள் ஆகின்றன.

Loading comments...