ஆகஸ்ட் 09 | அதிசயம் | தினசரி தியானம்

1 month ago

பொருளிலெல்லாம் மிகப் பெரிய பொருள் கடவுள்; ஆனால் அது யார்க்கும் புலப்படுவதில்லை. பெருங்கூச்சலிட்டு அழைப்பவன் கடவுள்; ஆனால் அவன் அழைப்பை யாரும் கேட்பதில்லை. மிக அருகில் இருப்பவன் கடவுள்; ஆனால் யாரும் அவனை உணர்வதில்லை. எல்லார்க்கும் அவன் தன்னைப் பங்கிட்டுக் கொடுத்திருக்கிறான்; ஆனால் அவன் பெயர் யாருக்கும் தெரியாது. கடவுளைக் காண முடியாது என்று சொல்லிக்கொண்டு அவனிடமே மக்கள் ஓடுவது அதிசயமன்றோ!

Loading comments...