ஆகஸ்ட் 07 | பேரமைப்பு | தினசரி தியானம்

1 month ago
6

இயற்கையின் அமைப்பு அருளே வடிவெடுத்தது. இம்மியளவு கேட்டையோ பட்சபாதத்தையோ அதில் காணமுடியாது. நுண்ணிய தளிரை இரக்கத்தோடு அது பாதுகாக்கிறது. பெருவலிவு படைத்த ஒன்று அவ்வலிவை முறைதவறிக் கையாளாதிருக்கும்படி இயற்கை பார்த்துக்கொள்கிறது. அது கேட்டைக் களையவும் நலத்தைக் காக்கவும் செய்கிறது. இவ்வமைப்பை அறிவதும் அருளை அறிவதும் ஒன்றே. அதை அறிபவர் அமைதி பெறுகின்றனர்.

Loading 1 comment...