ஆகஸ்ட் 06 | புதையல் | தினசரி தியானம்

1 month ago
1

அழியும் பாங்குடையது உனது உடல். ஆனால், அதனுள் எவ்வளவு சக்தி, எத்தனைவித வல்லமைகள், எத்தகைய விசைகள் மறைந்திருக்கின்றனவென்று உனக்குத் தெரியுமா? மனிதன் மண்ணுலகினுள் வந்து யுகங்கள் பல கடந்துபோய்விட்டன. ஆனால், அவனுக்குரிய வல்லமைகளில் அணுவளவுக்குமேல் இன்னும் வெளியாகவில்லை. ஆகையால், மனிதன் ஒன்றுக்கும் உதவாதவன் என்று சொல்லிவிடலாகாது. உள்ளே புதைந்திருக்கும் சக்தி அளப்பரியது. எவ்வளவுதான் புலப்படுத்தினாலும் அது முடிவில்லாதது.

Loading comments...