கருணாநிதி உடலை மெரினாவில் அடக்கம் செய்ய அனுமதி: ஹைகோர்ட் அதிரடி உத்தரவு- வீடியோ

OneIndia_TamilPublished: August 8, 2018
Published: August 8, 2018

திமுக தலைவர் கருணாநிதியின் நல்லடக்கத்தை மெரீனாவில் நடத்த சென்னை ஹைகோர்ட் 2 நீதிபதிகள் அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது.
கருணாநிதியை மெரினாவில் அடக்கம் செய்ய வேண்டும் என்ற, திமுக தரப்பின் கோரிக்கையை தமிழக அரசு நிராகரித்தைத் தொடர்ந்து நேற்று இரவு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பொறுப்பு வகிக்கும் ஹுலவாடி ரமேஷ், நீதிபதி சுந்தர் அமர்வின் முன்பு திமுக சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை ஹுலுவாடி ரமேஷுடன், எஸ்.எஸ். சுந்தர் இணைந்து விசாரித்தனர். ஹுலுவாடி ரமேஷ் இல்லத்தில் வைத்து விசாரணை நடைபெற்றது.

Be the first to suggest a tag

    Comments

    0 comments