திமுக தொண்டர்கள் ஆவேசம் பயணிகள் திண்டாட்டம்

OneIndia_TamilPublished: July 30, 2018Updated: July 31, 2018
Published: July 30, 2018Updated: July 31, 2018

வேலூர்மாவட்டம் திருப்பத்தூர் அருகே புதுப்பேட்டையில் திமுக தலைவர் கருணாநிதி சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலையில் சற்று பின்னடைவு என மருத்துவமனை அறிக்கையில் கூறப்பட்டது இதனை அடுத்து புதுப்பேட்டை சாலையில் கூடிய திராவிட முன்னேற்றகழக தொண்டர்கள் சாலையின் நடுவே டயர்களை போட்டு கொளுத்தியதால் பேருந்துகள் அனைத்தும் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து கடைகளும் அடைக்கப்பட்டது பேருந்தில் இருந்து பயணிகள் நடுவழியில் இறக்கிவிடப்பட்டனர் அங்கு கூடிய திமுக தொண்டர்கள் கருணாநிதி நலம் பெற வேண்டுமென்றும் தலைவர் கலைஞர் வாழ்க என்று கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க அப்பகுதி முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
DMK leader Karunanidhi was admitted to Cauvery hospital in Chennai, where he was admitted in a cure for treatment in Tiruppathur near Tiruppattur. In the hospital report, a slight setback in his health was followed by the Dravida Munneta volunteers on the Puthupettai road and the tires in the middle of the road

Be the first to suggest a tag

    Comments

    0 comments