Short Story Beware of Deceptive Promises ஏமாற்றும் வாக்குறுதிகளில் ஜாக்கிரதை #kuttystory

9 months ago
19

ரூ. 400/= இருந்தால் வாழ்நாள் பூராகவும் உட்கார்ந்து சாப்பிடலாம்..
ஊர்முழுவதும் ஓர் அறிவிப்பு.. இதைக் கண்டு பலர் வியந்தனர்.
இதைப்பற்றி மேலும் விசாரித்தபோது, 400 ரூபாய் பணத்துடன் வந்து சந்திக்க வேண்டிய இடத்தின் முகவரி கிடைத்தது. ஊரே திரண்டு அந்த இடத்திற்கு வந்தது.
வெறும் 400 ரூபாயில் வாழ்நாள் முழுவதும் தின்பதென்றால் சும்மாவா
உள்ளே போய் பார்த்தால்..
அங்கே ஒருவன் நாற்காலி விற்றுக்கொண்டிருந்தான்.
400 ரூபாய் கொடுத்து வாங்கிட்டு போய் காலம் முழுவதும் இதில் உட்கார்ந்து சாப்பிடலாம் சார்" என்று கூவினான்.
நீதி :
வாக்குறுதிகளை உடனே நம்பிவிடக் கூடாது.
நல்லா யோசிக்கணும்.
சாத்தியமான்னு பார்க்கணும்.
ரொம்ப அநியாயத்துக்கு ஆசைப்படக் கூடாது.

Loading comments...