முதல்வர் ஸ்டாலின் உதவிக்காக காத்திருக்கும் பெண்#india#tamilnadu#live#dmk #heart

1 year ago
1

*இருதய நோயால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 30 லட்சம் ரூபாய் நிதி தேவை முதலைமச்சர் உதவ கோரிக்கை*

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த ஆலமரத்தூர் கிராமத்தைச் சேர்ந்த செல்வி (29) என்பவருக்கு 30 லட்சம் ரூபாய் நிதி தேவை என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

செல்வி, கடந்த 2021-ம் ஆண்டு, இருதய நோயால் பாதிக்கப்பட்டார். கோவை குப்புசாமி நாயுடு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இந்த சிகிச்சைக்கு 7 லட்சம் ரூபாய் செலவு செய்தார். அரசு காப்பீட்டுத் தொகையில் 1.70 லட்சம் ரூபாய் மட்டுமே எடுத்துக் கொள்ளப்பட்டது.

தற்போது, செல்விக்கு மேல் அறுவை சிகிச்சை தேவைப்படுகிறது. இந்த சிகிச்சைக்கு 30 லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது.இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் சாகிதா 7ஆம் வகுப்பு மற்றும் பறிதனியா 3ஆம் வகுப்பு படிக்கின்றனர். செல்வியின் கணவர் மணி, கூலி வேலை செய்து வருகிறார். செல்விக்கு சிகிச்சை அளிக்க அவரது சம்பளம் போதாது. செல்வி நடமாட முடியாமல் இருப்தால் அவருக்கு உதவியாக கணவர் இருக்க வேண்டிய நிலை இதனால், வேலைக்கு செல்ல முடியாமல் தவித்து வருகிறார்.

இந்த நிலையில், முதலமைச்சர் தனக்கு உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்று செல்வி கோரிக்கை விடுத்துள்ளார்.
@NewsTamil24X7TV
@PuthiyaThalaimuraiTV
@SathiyamTV @speedcitynews @live

Loading comments...