No current, no mobile... nature life, agriculture; Families living in America! | No electricity,

2 years ago
8

http://corneey.com/edBVQb

கரண்ட், மொபைல் கிடையாது... இயற்கை வாழ்க்கை, விவசாயம்; அமெரிக்காவில் வாழும் குடும்பங்கள்! | No electricity, no cell phone... American farmers living with nature!

அமெரிக்காவில் மின்சாரமே இல்லாமல் எப்படி வாழ்க்கை நடத்த முடிகிறது. அவர்களது அன்றாடத் தேவைகளை அவர்கள் எப்படி பூர்த்தி செய்து கொள்ள முடிகிறது? நமக்கு தேவையான அனைத்தையும் இயற்கையே தருகிறது. அதை நாம் எப்படி பயன்படுத்தி கொள்கிறோம் என்பதே நம்முன் இருக்கும் சவால்.

உலகின் மிகவும் வளர்ச்சியடைந்த நாடுகளில் ஒன்று அமெரிக்கா. அமெரிக்கா என்றாலே வானுயர கட்டடங்கள், மின்மயமான நகர அமைப்புகள், நவீன தொழில்நுட்பம், வேகமாக வளர்ந்துள்ள தகவல் தொடர்பு இவைதான் நமது நினைவுக்கு வரும்.

இயற்கை விவசாயம்தான் மனநிறைவை கொடுக்குது" கம்ப்யூட்டரிலிருந்து கழனிக்கு... கலக்கும் ஐ.டி ஊழியர்!
ஆனால் அமெரிக்காவில் உள்ள மெய்ன் மாகாணத்தில் சில குடும்பங்கள் மின்சாரத்தை பயன்படுத்துவதில்லை. அதோடு மொபைல் போனையும் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்துவதில்லை என்று சொல்லும் போது கேட்க வியப்பாக உள்ளதா... சமீபத்தில் அமெரிக்கா சென்று வந்த லயோலா கல்லூரி பேராசிரியர் கிளாட்சன் சேவியர், அங்குள்ள இயற்கை விவசாயப் பண்ணைகளைச் சென்று பார்வையிட்டிருக்கிறார். அதுகுறித்து நம்மோடு அவர் பகிர்ந்துகொண்ட தகவல்கள் இங்கே இடம்பெறுகின்றன.

அமெரிக்காவிலுள்ள மெய்ன் மாகாணத்தில் வாழும் ஈத்தன், சாரா குடும்பம் மின்சாரத்தின் உதவியின்றி விவசாயம் செய்து வருகின்றனர். அமெரிக்காவில் மின்சாரமே இல்லாமல் எப்படி வாழ்க்கை நடத்த முடிகிறது. அவர்களுடைய அன்றாடத் தேவைகளை அவர்கள் எப்படி பூர்த்தி செய்து கொள்ள முடிகிறது?

ஒரு மனிதனுக்கு மின்சாரம் எதற்கெல்லாம் தேவைபடுகிறது, அந்த தேவையை எப்படி மின்சாரம் இல்லமால் நிறைவு செய்யலாம் என்பதை யோசித்து சூரிய சக்தி அல்லது காற்றாலை மின்சாரத்தை பயன்படுத்தி இயற்கையுடன் இணைந்து வாழ்கிறார்கள் என்பது மிகவும் ஆச்சரியமாக இருந்தது.

10 ஏக்கர் நிலத்தில் பழங்கள், காய்கறிகள், மூலிகைகள் என அனைத்தையும் வைத்திருக்கின்றனர். அங்கு செல்லும் அனைவரும் இலவசமாக எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிட்டு கொள்ளலாம். விவசாயத்திற்கு உரங்கள் எல்லாம் வாங்க அதிகம் செலவு ஆகுமே எப்படி அவர்கள் அதை செய்கிறார்கள் என்று பார்த்தால் வீட்டில் சமைத்து விட்டு மீதமாகும் கழிவுகளை உரமாக பயன்படுத்துகின்றனர்.

அது மட்டுமன்றி மரத்தால் ஆன ஒரு கழிவறை செய்து அதில் மலம் கழித்தவுடன் தண்ணீர் ஊற்றாமல் அதில் மணல் துகள்களை போட்டு மூடிவிடுகின்றனர். அது துர்நாற்றத்தை போக்கி விடுகிறது. அந்த கழிவுகளை மட்க வைத்து உரமாக்கி விவசாயத்திற்குப் பயன்படுத்துகின்றனர். இதேபோல சமையலறை கழிவுகளையும் உரமாக்கி பயன்படுத்துகின்றனர். கழிவுகள் என்று எதையுமே தூக்கி எரிவதில்லை. எல்லாவற்றையும் உரமாக்கி நிலத்துக்குப் பயன்படுத்துகின்றனர்.

தம் வாழ்வின் பெரும்பகுதி நேரத்தை மொபைலில் செலவு செய்பவர்கள் நம் இந்தியர்கள். சார்ஜ் 50% இருக்கும்போதே வெளியில் இருந்தாலும் பவர் பேங்க் வைத்து சார்ஜ் போடுவர். ஆனால் அமெரிக்காவிலோ பல இடங்களில் இன்றும் லேண்டுலைன் இணைப்பையே பயன்படுத்தி வருகின்றனர்.

அமெரிக்காவில் குளிர் அதிகம் என்பதால் ஓர் அறையையே குளிர்சாதனப் பெட்டியாக பயன்படுத்துகின்றனர்.
அங்கு இருக்கும் குளிரை சமாளிக்க சமையல் அறையிலிருந்து வெளியேறும் சூட்டை வைத்து துணிகளை காய வைக்கவும், விளைவிக்கும் மூலிகைகளை காய வைக்கவும் பயன்படுத்துகின்றனர்.

அதை தாண்டி பெரும்பாலான சமையலை சூரிய சக்தியில் இயங்கும் அடுப்பை வைத்து சமைக்கிறனர். அங்கு இருக்கும் குறைந்த வெயிலை வைத்து கொண்டே அவர்கள் சூரிய எரிவாயு வைத்து சமைக்கும் போது நா‌ம் ஏன் அதனை பயன்படுத்த கூடாது? அதிகரிக்கும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை இதை கொண்டு சமாளிக்க முடியுமா?

என்ன ஒரு பிரச்னை என்றால் இந்த வெயிலில் நின்று சமைத்தால் உணவுடன் சேர்த்து நாமும் வெந்துவிடுவோம். ஆனால், இந்திய காலநிலை அதிகம் பழக்கப்பட்ட நம்மை இந்த வெயில் எதுவும் செய்யாது.
நமக்கு தேவையான அனைத்தையும் இயற்கையே தருகிறது. அதை நாம் எப்படி பயன்படுத்தி கொள்கிறோம் என்பதே நம்முன் இருக்கும் சவால். அமெரிக்க விவசாயிகள் இயற்கையிலிருந்து கிடைக்கும் அனைத்தையும் பயன்படுத்தி விவசாயம் செய்கின்றனர். அதனால் அவர்களுக்கு செலவு மிச்சமாகிறது. நாமும் அந்த முறையை பின்பற்றி இயற்கையோடு இணைந்து வாழ பழகுவோம்."

AboutUs About us https://bit.ly/3GUPFOa
Contact us +919942258153 kvk.subadhra@gmail.com
Thank You Very Much for Sharing YourValuable Thoughts
https://5ed717sgud39h06f6jtasmli4v.hop.clickbank.net

Loading comments...