If these 2 ingredients are mixed with coconut oil a

2 years ago
7

http://corneey.com/edGhRC

If these 2 ingredients are mixed with coconut oil and applied to the scalp, grey hair will turn black quickly. | White Hair to Black Hair Oil

நரை முடியை கருப்பாக மாற்றுவதற்கு ஹேர் டை ஒன்று மட்டுமே தீர்வு கிடையாது. அது தவிர்த்து இயற்கையாக நிறைய வழிமுறைகள் நமக்கு உள்ளது. அதில் ஒரு குறிப்பை தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். ஹேர்டை அடிப்பது போல இது ரொம்பவும் கஷ்டமான விஷயம் அல்ல. தினமும் இந்த எண்ணெயை நீங்கள் லேசாக தலைக்கு தேய்த்து வந்தாலே உங்களுடைய வெள்ளை முடி அனைத்தும் சீக்கிரம் கருப்பு முடியாக மாறும்.

இந்தக் குறிப்புக்கு நாம் பயன்படுத்தப் போகும் பொருள் சுத்தமான மரச்செக்கு தேங்காய் எண்ணெய் 50 ml, 1 டேபிள் ஸ்பூன் காபித்தூள், 1 டேபிள் ஸ்பூன் டீ தூள். அவ்வளவு தான். ஒரு சிறிய கிண்ணத்தில் எடுத்து, வைத்திருக்கும் தேங்காய் எண்ணெயை ஊற்றி அதில் காபித்தூள், டீ தூள், இந்த இரண்டையும் பொடி செய்து போட வேண்டும். அதாவது காபித்துள் நைசாக பவுடராக இருந்தால் பரவாயில்லை. ஒரு சில பிராண்டில் கொஞ்சம் கொரகொரப்பாக காபித்தூள் டீ தூள் கிடைக்கும் அல்லவா, அதை நீங்கள் குறிப்புக்கு பயன்படுத்தினால் கொஞ்சம் பொடித்து பயன்படுத்திக் கொள்ளுங்கள். -

இப்போது சிறிய பௌலில் தேங்காய் எண்ணெயில் காப்பித்தூள் டீ தூள் இரண்டும் கலந்து இருக்கின்றது. இந்த எண்ணெயை டபுள் பாய்லிங் மெத்தடில் சூடு செய்ய வேண்டும். நேரடியாக அடுப்பில் வைத்து சூடு செய்யக்கூடாது. அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் தண்ணீரை ஊற்றி, அந்த தண்ணீரை நன்றாக கொதிக்க வையுங்கள். கொதிக்கின்ற தண்ணீரில் இந்த எண்ணெய் கிண்ணத்தை வைத்து 5 லிருந்து 7 நிமிடங்கள் சூடு செய்யுங்கள்.

பிறகு அடுப்பை அணைத்துவிட்டு இந்த எண்ணெயை நன்றாக ஆற வைத்து வடிகட்டி ஒரு சின்ன பாட்டிலில் ஊற்றி ஸ்டோர் செய்து வைத்துக் கொள்ளுங்கள். அவ்வளவு தான். நமக்கு தேவையான எண்ணெய் தயார். இந்த எண்ணெயை நீங்கள் வீட்டில் இருக்கும் போது எப்போதும் போல தேங்காய் எண்ணெய் வைப்பீர்கள் அல்லவா அப்படி தலையில் வைத்து வரலாம்.
அப்படி இல்லையென்றால் இரவு தூங்கச் செல்வதற்கு முன்பு இந்த எண்ணெயை தலையில் தடவி நன்றாக மசாஜ் செய்து விட்டு மறுநாள் காலை ஜென்டில் ஆன ஷாம்பு போட்டு தலைக்கும் குளித்துக் கொள்ளலாம். வாரத்தில் மூன்று நாட்கள் கூட இந்த குறிப்பை பின்பற்றி பாருங்கள். தொடர்ந்து மூன்று மாதங்கள் இந்த குறிப்பை பின்பற்றும்போது உங்களுக்கு நல்ல வித்தியாசம் தெரியும்.

காபித்தூள் டீ தூள் பயன்படுத்துவதன் மூலம் ஏதேனும் பக்க விளைவுகள் வந்துவிடுமோ என்று பயப்பட வேண்டாம். நாம் சாப்பிடக்கூடிய பொருட்கள்தான் இது. ஆகவே பக்க விளைவுகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இல்லை. இந்த எண்ணெயை பயன்படுத்துவதன் மூலம் சில பேருக்கு ரிசல்ட் உடனடியாக தெரியும். சில பேருக்கு ரிசல்ட் தெரிய இன்னும் கொஞ்சம் கூட கூடுதலான நாட்கள் எடுக்கலாம். காரணம் எல்லோருடைய தலைமுறையும் ஒரே மாதிரி இருப்பது கிடையாது.

பின்குறிப்பு: தேங்காய் எண்ணெயில் காபித்தூள், டீ தூள் சேர்த்து தயார் செய்து வைத்திருக்கின்றோம் அல்லவா, இதில் உப்பை கலந்தால் இதனுடைய கலர் நம்முடைய தலையில் சீக்கிரம் ஒட்டி பிடிக்கும். ஆனால் உப்பை கலக்கும் போது சில பேருக்கு முடி டிரை ஆவதற்கு வாய்ப்புகள் உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. உங்களுக்கு ரொம்பவும் ட்ரை ஹேர் இருந்தால் உப்பை நீங்க பயன்படுத்தாதீங்க. உங்களுக்கு ட்ரை ஹேர் இல்லை எனும் பட்சத்தில், உப்பு சேர்த்து இந்த ரெமிடியை பயன்படுத்தலாம்.

உப்பு சேர்த்து இந்த ரெமிடியை பயன்படுத்தி சீக்கிரம் நரைமுடியை வெள்ளையாக்க வேண்டும் என்ற ஆர்வம் உங்களுக்கு இருந்தால் அதை நீங்கள் ட்ரை பண்ணி பாருங்க. ஆனா வாரத்தில் இரண்டு நாள் உங்களுடைய தலைக்கு ஆயில் பாத் கட்டாயம் கொடுக்க வேண்டும். அதோடு மட்டுமல்லாமல் தலைக்கு ஈரப்பதத்தை கொடுக்கக் கூடிய அலோவேரா ஜெல், தேங்காய் பால் இவைகளை வாரத்தில் இரண்டு நாட்கள் தலையில் தொடர்ந்து ஹேர்பாக போட்டு வருவது முடியின் ஆரோக்கியத்திற்கு நல்லது.

About us https://bit.ly/3GUPFOa
Contact us +919942258153 kvk.subadhra@gmail.com
https://c95a1c3hugvyb2a4l8e5u40lxd.hop.clickbank.net

Loading comments...