இனி டவரெல்லாம் வேண்டாம், சாட்டிலைட்டில் மொபைல்

2 years ago
2

http://gestyy.com/edFhYT

No more towers, just satellite mobile phones.. Elon Musk's plan! | Elon Musk's SpaceX, T-Mobile Plan To Connect Mobile Phones To Satellites - GoodReturns Tamil

Read more at: https://tamil.goodreturns.in/news/elon-musk-s-spacex-t-mobile-plan-to-connect-mobile-phones-to-satellites-030779.html

உலகம் முழுவதும் மொபைல் போன்கள் டவர்கள் அமைக்கப்பட்டு அதன் மூலம் இயக்கப்பட்டு வருகிறது என்பது அனைவரும் அறிந்ததே.

இந்த நிலையில் எலான் மஸ்க் தனது ஸ்டார் லிங்க் நிறுவனத்தின் மூலம் சாட்டிலைட் மூலம் மொபைல் போன்களை இயங்க வைக்க திட்டமிட்டு உள்ளார்.

அமெரிக்காவில் முதல்கட்டமாக இந்த திட்டத்தை செயல்படுத்த உள்ளதாகவும் படிப்படியாக உலகம் முழுவதும் மொபைல் போனுடன் சாட்டிலைட்டை இணைக்க அவர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

செயற்கைக்கோள் அமெரிக்க வயர்லெஸ் கேரியர் டி-மொபைல் யுஎஸ் இன்க், அமெரிக்காவின் சில பகுதிகளில் மொபைல் பயனர்களுக்கு நெட்வொர்க் வழங்க, எலோன் மஸ்க்கிற்கு சொந்தமான ஸ்பேஸ்எக்ஸின் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களை பயன்படுத்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே பயனர்களின் மொபைல் போன்கள் செயற்கைக்கோள்களுடன் நேரடியாக இணைக்கும் திட்டத்தை எலான் மஸ்க் செயல்படுத்த உள்ளார் என தெரிகிறது.

செயற்கைக்கோள்களுடன் மொபைல் போன்கள் இணைப்பு மொபைல் போன்கள் செயற்கைக்கோள்களுடன் இணைக்கப்பட்டுவிட்டால், செல் கோபுரங்களின் தேவை குறையும் என்றும், தொலைதூர பகுதிகள், செல் கவரேஜ் இல்லாத பகுதிகளுக்கு உரையாட, புகைப்படங்களை அனுப்புவதற்கான சேவையை வழங்கலாம் என்று எலான் மஸ்க் கூறியுள்ளார்.

புதிய நெட்வொர்க் ஸ்டார்லிங்கின் செயற்கைக்கோள்கள் மூலம் புதிய நெட்வொர்க்கை உருவாக்க டி-மொபைலின் மிட்-பேண்ட் ஸ்பெக்ட்ரத்தை பயன்படுத்த எலான் மஸ்க் திட்டமிட்டுள்ளார். இதனால் இந்நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் பெரும்பாலான மொபைல் போன்கள் புதிய சேவையை பெறும். இது அடுத்த ஆண்டு இறுதிக்குள் பீட்டா கட்டத்தில் குறுஞ்செய்தி சேவைகளுடன் தொடங்கும் என்று கூறப்படுகிறது.

3000 செயற்கைக்கோள்கள் 2019 ஆம் ஆண்டு முதல் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் கிட்டத்தட்ட 3,000 ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களை ஏவியுள்ளது என்பதும் அவை பூமியை சுற்றி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் மொபைல் போன்களை செயற்கைக்கோள்களுடன் இணைப்பது எலான் மஸ்க் நிறுவனத்திற்கு சாத்தியமான ஒன்றாகும்.

பெரிய ஆண்டெனாக்கள் ஸ்பேஸ்எக்ஸின் அடுத்த தலைமுறை ஸ்டார்லிங்க் செயற்கைக்கோளுடன் மொபைல் போன்களை இணைக்கும் திட்டத்திற்கு டி-மொபைல் நெட்வொர்க்கில் நேரடியாக மொபைல் போன்களை இணைக்க பெரிய ஆண்டெனாக்கள் பயன்படுத்தப்படும் என எலான் மஸ்க் கூறியுள்ளார்

புதிய தொலைபேசி தேவையில்லை "நாங்கள் சிறப்பு ஆண்டெனாவை உருவாக்கி வருகிறோம். அவை உண்மையில் மிகவும் மேம்பட்ட ஆண்டெனாவாக இருக்கும் என்றும் கூறிய எலான் மஸ்க், இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், நீங்கள் புதிய தொலைபேசியை பெற வேண்டிய அவசியமில்லை என்றும், நீங்கள் தற்போது வைத்திருக்கும் தொலைபேசியிலேயே செயற்கைக்கொளை இணைக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

About us https://bit.ly/3GUPFOa
Contact us +919942258153 kvk.subadhra@gmail.com
https://372d1i44ud5zgw5kvb-qpmdsb8.hop.click

Loading comments...