Dil Irundhal | தில் இருந்தால் உந்தன் வாழ்க்கை என்றும் உந்தன் கையில் | Tamil Motivation

1 year ago
4

#srilanka #srilankamotivation #tamilmotivation

வாழ்க்கையை வெல்ல தில் வேணும் நண்பா!

தில் இருந்தால் உந்தன் வாழ்க்கை என்றும் உந்தன் கையில்
ஏன் பிறந்தாய் வரலாறு சொல்ல வேணும் பதில்
மண்ணில் விழுந்தால் மரமாக எழ வேணும் பலம் நீ ஒரு நாள்
அவை விண்ணில் மின்னும் நட்சத்திரம்

உந்தன் வாழ்க்கை உந்தன் கையில்

மலை போல் தடைகள் என்றும் இருந்திடும் கடந்திடும் மன நிலை உன்னுள் வரும் வரை முயற்சிகள் கொள்ளும் வேகம் விவேகம் ரெண்டும், கொண்டு நீ முன்னில் வரும் நாளே உந்தன் முதல் படி வெற்றி கொள்ளும் ஓசை எழும்

வெற்றி உன்னை தேடி வரும் உலகம் உன்னை போற்றி தள்ளும் உந்தன் வலிமை பேசப்படும் உனக்கும் ஒரு காலம் வரும் தடைகள் மேல் தடைகள் தாண்டி நீயும் செல்ல பலம் வரும் முயற்சி உன்னுள் இருக்கும் வரை வாழ்க்கைக்கு அது ஒளி தரும்

உன்னால் முடியும் தம்பி நம்பிக்கையை மனதில் கொண்டு முதல் அடி வை கனமாக செல்ல முன்னே வென்று நீ துணிந்தால் எல்லை இல்லை வளர்ச்சியை கொள்ள நீ துணிந்தால் எல்லை இல்லை வளர்ச்சியை கொள்ள நீ துணிந்தால் மலை கூட துறும்பாகும் மெல்ல

தடைகளை உடைத்து நீ வழிகளமைத்துக் கொள் உன்னால் என்றும் முடியும் நண்பா அறிவினை நீ வளர்த்துக்கொள் முடியாது என்று எதுவும் இல்லை முயற்சியை அணைத்து கொள் உந்தன் வாழ்க்கை உந்தன் கையில் உச்சத்துக்கு எடுத்து செல்

காலை வரும் மாலை வரும் முழு பலன் எடுத்து கொள் தூங்காதே தம்பி தூங்காதே விரைவினில் எழுந்து கொள் விடா முயற்சி மந்திரமாக என்றும் மனதில் செலுத்திக் கொள் தோல்வி வந்து சதி செய்யும் தோலாமல் தடை உடைத்து செல்

சரவெடி போலே நீயும் ஓயாமல் நீ மேலே செல்லு விடிந்தாலும் ஒளி தரும் அனலாக மாறி கொள்

தோல்வி வரும் விழுந்தாலும் இலட்சியத்தை மனதில் கொண்டு மருபடி எழுந்து நீ பிரபஞ்சத்தை வெற்றி கொள்
கல்வி அறிவு மகத்தான தூண்களென்று நன்று அறிந்து காட்டு உந்தன் ராஜாங்கத்தை வேர்வை இரத்தம் கண்ணீர் கொண்டு

உந்தன் வாழ்வில் நீயே ஹீரோ கஷ்டம் வரும் கத்திக் கொண்டு எதிர்த்து நீ எழுந்து நில் மார்பை முன்னில் ஏந்தி கொண்டு

My channel
https://www.youtube.com/zaharan_hameed

Instagram
https://www.instagram.com/zaharan_hameed/

Facebook
https://www.facebook.com/uniquezee

Twitter
https://twitter.com/hameed_zaharan/media

Tiktok
www.tiktok.com/@zaharanhameed2020

Loading comments...