SpaceX Dragon Capsule Return to Earth with 1800 Kg Scientific investigations!

1 year ago
38

http://ceesty.com/edAgLr

By Karthick M கிஸ்பாட் Scitech

SpaceX Dragon Capsule Return to Earth with 1800 Kg Scientific investigations! - Tamil Gizbot

The countries of the world were waiting: the Dragon capsule that came to earth with a weight of 1800 kg. What was inside?

SpaceX இன் Dragon Capsule நேற்றிரவு 8:35 மணிக்கு விண்வெளி ஆய்வு மையம்(ஐஎஸ்எஸ்) இல் இருந்து 1814 கிலோ பொருட்களுடன் பூமிக்கு அனுப்பப்பட்டது. சுமார் 28 மணிநேர பயணத்துக்கு பிறகு பசிபிக் கடற்கரை பகுதியில் இந்த கேப்ஸ்யூல் வந்து விழுந்தது.

Read more at: https://tamil.gizbot.com/scitech/spacex-dragon-capsule-return-to-earth-with-1800-kg-scientific-investigations/articlecontent-pf231455-034263.html

விண்வெளியில் இருந்து அனுப்பப்பட்ட சுமார் 1800 கிலோ எடையுள்ள பொருட்கள் என்னவென்று தெரியுமா?

தனியார் நிறுவனம் மூலம் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்தை நாசா முதன்முறையாக கடந்தாண்டு சோதனை செய்தது. இதில் நாசாவை சேர்ந்த பாப் பென்கன் மற்றும் டக் ஹர்லி ஆகிய வீரர்கள் இடம்பெற்றனர். விண்வெளி ஆய்வு மையத்தில் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு ஸ்பேஸ் எக்ஸின் டிராகன் கேப்சூல் மூலம் பூமிக்கு திரும்பினர்.

நாசாவின் செயல்பாட்டுக்கு பக்கபலமாக ஸ்பேஸ் எக்ஸ் சரியாக 9 வருடங்களுக்கு பிறகு அமெரிக்க மண்ணில் இருந்து முதன் முறையாக மனிதர்களை ஏந்திக்கொண்டு ராக்கெட் விண்ணுக்கு சென்றது. தனியார் நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ் மூலம் இந்த திட்டம் வெற்றிப் பெற்றது. இதையடுத்து நீண்ட நாட்களுக்கு பிறகு நாசா தேர்ந்தெடுத்த முதல் தனியார் நிறுவனம் என்ற பெருமையை ஸ்பேஸ் எக்ஸ் பெற்றது. தொடர்ந்து நாசாவின் பல்வேறு செயல்பாட்டுக்கு ஸ்பேஸ் எக்ஸ் பக்கபலமாக இருக்கிறது.

எலான் மஸ்க்கிற்கு சொந்தமான நிறுவனம் உலகின் டாப் பணக்காரர்களில் பிரதான ஒருவரான எலான் மஸ்க்கிற்கு சொந்தமான நிறுவனம் தான் ஸ்பேஸ் எக்ஸ். ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் எலான் மஸ்க்கின் கனவுத் திட்டத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது. எலான் மஸ்க்கின் கனவுத்திட்டமாக கூறப்படுவது செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்புவது தான். செவ்வாய் கிரகத்துக்கு பயணிக்கக்கூடிய ஸ்டார்ஷிப் விண்கல பணியில் ஸ்பேஸ் எக்ஸ் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

ஸ்பேஸ் எக்ஸ் இன் டிராகன் கேப்ஸ்யூல் அதேபோல் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசாவுடன் இணைந்து பல்வேறு திட்டங்களில் செயலாற்றி வருகிறது. இதன் ஒருபகுதியாக விண்வெளி ஆய்வு மையத்துக்கு தேவையான ஆய்வு பொருட்களை எடுத்து செல்லும் பணிகளுக்கு ஸ்பேஸ் எக்ஸ் இன் டிராகன் கேப்ஸ்யூல் தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

1800 கிலோ ஆய்வு பொருட்கள் அதன்படி ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் கேப்ஸ்யூல் 25-வது முறையாக கடந்த ஜூலை மாதம் விண்வெளி ஆய்வு மையத்துக்கு அனுப்பப்பட்டது. ஜூலை 16 ஆம் தேதி விண்வெளி ஆய்வு மையத்தை அடைந்த இந்த கேப்ஸ்யூல் கடந்த 19 ஆம் தேதி 1800 கிலோ பொருட்களுடன் ஆய்வு மையத்தில் இருந்து பிரித்து அனுப்பப்பட்டது. விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து அனுப்பப்பட்ட இந்த கேப்ஸ்யூலில் உள்ள 1800 கிலோ பொருட்களும் ஆய்வு பொருட்கள் தான். சுமார் 28 மணி நேர பயணத்துக்கு பிறகு இந்த கேப்ஸ்யூல் ப்ளோரிடா கடற்கரையில் வந்து விழுந்தது.

https://twitter.com/i/status/1560664135586676736

டிராகன் கேப்ஸ்யூல் வீடியோ ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் கேப்ஸ்யூல் விண்வெளி நிலையத்தில் இருந்து வெளியேறும் கண்கவர் வீடியோவை ஐஎஸ்எஸ் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ பலரால் பகிரப்பட்டும், விரும்பப்பட்டும் வருகிறது.

கேப்ஸ்யூல் கொண்டு வந்த பொருட்கள் காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை தீர்மானிக்க பூமியின் தூசியை மேப்பிங் செய்தல், விண்வெளி பயணம் ஏற்படுத்தும் தாக்கம், விண்வெளியில் செல்கள் இயங்கும் விதம், மைக்ரோ கிராவிட்டி விளைவுகள் ஆய்வு செய்தல், நுண்ணுயிர்களின் வளர்சிதை மாற்றம் போன்ற பல சோதனை தரவுகள் இதில் அடங்கும். விஞ்ஞானிகள் இந்த சோதனைகளின் முடிவுகளை பகுப்பாய்வு செய்வார்கள்.

விண்வெளி ஆய்வு மையம் என்றால் என்ன? விண்வெளியில் பூமியைச் சுற்றிக்கொண்டே இருக்கும் ஆய்வு நிலையம் தான் சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் (International Space Station) ஆகும். இந்த நிலையத்தை 1998ஆம் ஆண்டில் விண்வெளியில் கட்டத் தொடங்கினர். தினமும் இந்த நிலையம் பூமியை 15.7 முறை சுற்றி வருகிறது. இந்த நிலையத்தில் தங்கும் விண்வெளி வீரர்கள் தினமும் 16 சூரிய உதயத்தையும், மறைதலையும் காண்கின்றனர். இந்த நிலையத்தின் நீளம் 239 அடி, அகலம் 356 அடி, உயரம் 66 அடி ஆகும்.

About us https://bit.ly/3GUPFOa
Contact us +919942258153 kvk.subadhra@gmail.com
https://39bed4w4zg69p6brqg2qiz2t45.hop.clickbank.net

Loading comments...