The crust that drips like honey!" Strange things happening under the ground.. Amazed explorers!

1 year ago
13

தேன் போல சொட்டி வழியும் கிரஸ்ட்!" நிலத்திற்கு கீழ் நடக்கும் விசித்திரம்.. வியந்துபோன ஆய்வாளர்கள்!

http://gestyy.com/edWZKa

The crust that drips like honey!" Strange things happening under the ground.. Amazed explorers!

பூமியின் மேற்பரப்பில் மூன்று அடுக்குகள் உள்ளன.. வெளிப்புறமானது மேலோடு (crust), நடுப்பகுதி மேன்டில் (mantle) மற்றும் மையப் பகுதி கோர் (core) என்று அழைக்கப்படுகிறது. மத்திய ஆண்டிஸின் பீடபூமி பகுதிகள் கடந்த 20 மில்லியன் ஆண்டுகளில் பெருமளவு உயர்ந்து உள்ளது. அதற்கு இந்த லித்தோஸ்பெரிக் டிரிப்பிங் தான் காரணம் என்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

வாஷிங்டன்: பூமியின் கூழ் பகுதியில் இருக்கும் பகுதி அப்படியே தேன் போலச் சொட்டி வழிவதாக ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர்.
பூமி குறித்துப் பல தகவல்களைத் தெரிந்து கொள்ள ஆய்வாளர்கள் தொடர்ச்சியாக ஆய்வுகளை நடத்தி வருகின்றனர். பூமியின் மையப் பகுதியில் இருக்கும் பொருள் குறித்த ஆய்வு நடந்து வருகிறது.
அப்படித்தான் சமீபத்திய ஆய்வில் உலகின் மிக நீண்ட மலைத்தொடரான ஆண்டிஸ் மலைத்தொடருக்குக் கீழே சில முக்கிய தகவல்களை ஆய்வாளர்கள் கண்டறிந்து உள்ளனர்.
சூரியனை விட்டு விலகும் பூமி.. தமிழகத்தில் கடுங்குளிர் நிலவுமா.. சென்னை வானிலை மையம் பதில்
பல லட்சம் ஆண்டுகள்
நீளமான மலைத்தொடரான ​​ஆண்டிஸின் கீழ் இருக்கும் கிரஸ்ட் (crust) பகுதி தேன் போலச் சொட்டி வழிந்து வருவதாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். இது இன்று நேற்று தொடங்கியது இல்லையாம். சுமார் மில்லியன் ஆண்டுகளாகவே இது நடந்து வருவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இதைப் பூமியின் நடுப்புறத்தில் இருக்கும் மெண்டில் (mantle) உறிஞ்சி வருவதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர்.
லித்தோஸ்பெரிக் டிரிப்பிங்

இதனை ஆய்வாளர்கள் லித்தோஸ்பெரிக் டிரிப்பிங் என்று குறிப்பிடுகின்றனர். அதாவது பூமியின் வெளிப்புற ஷெல்லின் பாறை தொடர்ந்து கிரகத்தின் நடுப்புறத்தில் உள்ள திரவ அடுக்கால் உறிஞ்சப்பட்டு வருவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் தான் பூமியின் மேற்பரப்பில் சில சிதைவுகள் ஏற்பட்டு உள்ளன. பூமியில் ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு அளவுக்கு உயர்ந்து இருப்பதற்கு இது தான் காரணம் ஆகும்! அதாவது மலைகள் ஏற்பட இந்த செயல்முறை தான் காரணமாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
பூமியின் மூன்று பகுதிகள்
பல பகுதிகள்

பிளேட் டெக்டோனிக்ஸ் பற்றிய கண்டுபிடிப்புகள் புதியவை. அதேநேரம் கடந்த காலங்களில் ஏற்கனவே துருக்கி, மேற்கு அமெரிக்கா உட்பட உலகில் பல பகுதிகளில் லித்தோஸ்பெரிக் டிரிப்பிங் கண்டறியப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. தென் அமெரிக்காவில் உள்ள மத்திய ஆண்டிஸ் மலைகளில் பல பகுதிகள் இந்த லித்தோஸ்பெரிக் டிரிப்பிங் முறையிலேயே உருவாக்கப்பட்டதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர்.
தேன் போல

இது குறித்து ஆய்வாளர் ஜூலியா ஆண்டர்சன் கூறுகையில், "ஆண்டிஸ் மலைகளின் ஒரு பகுதியின் மேற்பரப்பில் உருமாற்றம் ஏற்பட்டு உள்ளது. இதற்காகக் கீழே உள்ள லித்தோஸ்பியரின் பெரும்பகுதி சரிந்து உள்ளதே காரணம். அடர்த்தியின் காரணமாக, இது தேன் போல உள்ளே சொட்டுகிறது. பூமியின் வெளிப்புற ஷெல்லின் பகுதிகள் தடிமனாகி, ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையை அடையும்போது, அவை கீழ் நோக்கிச் சொட்டத் தொடங்குகிறது. இப்படி மூழ்கும் போது முதலில் மேற்பரப்பில் ஒரு படுக்கையை உருவாக்குகிறது.
ஆய்வு

இவை நமது பூமியில் பல லட்சம் ஆண்டுகளாகத் தொடர்ந்து நடந்து வந்து இருக்கலாம். இவை தான் பூமியில் தற்கால மலைகள் ஏற்படக் காரணம் ஆகும். பூமிக்குக் கீழ் உள்ள லித்தோஸ்பியர் பகுதி கடினமானது என்று கருதப்பட்ட நிலையில், லித்தோஸ்பியர் நினைத்ததை விட லேசானது என்றும் திரவம் போன்றது என்றும் இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.
About Us
+919942258153 kvk.subadhra@gmail.com
Thank You Very Much for Sharing YourValuable Thoughts

https://67aff5yd05v6owcercndl6zkd6.hop.clickbank.net

Loading comments...