பெங்களூரில் அபார்ட்மெண்ட் வீடு வாங்க போறீங்களா? உங்களுக்கு ஒரு ஷாக் தகவல்!

2 years ago
23

http://ceesty.com/edmd2f

Are you going to buy an apartment house in Bangalore? Shocking news for you! By Tamilarasu updated: Wednesday, July 27, 2022, 14:21 [IST]

Read more at: https://tamil.goodreturns.in/news/homebuyers-actually-own-the-land-their-apartment-is-built-on-030032.html

தற்போது தனி வீடு வாங்கும் கலாச்சாரம் கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில் அப்பார்ட்மெண்ட் வீடு வாங்கும் நிலை பெரும்பாலான மக்களுக்கு ஏற்படுகிறது.

சிறுக சிறுக சேர்த்து வைத்து வங்கியில் கடன் வாங்கி அப்பார்ட்மெண்ட் வீடு வாங்கும் வீட்டின் உரிமையாளருக்கு அந்த அப்பார்ட்மெண்டில் நிலம் சொந்தமா? என்ற கேள்வி எழுந்துள்ளது

குறிப்பாக கர்நாடக மாநிலத்தில் இது குறித்த சர்ச்சைகள் எழுந்து வரும் நிலையில் இதில் என்ன சிக்கல்? என்பதை தற்போது பார்ப்போம்.

அடுக்குமாடி குடியிருப்பு அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்குபவர்கள் 1908 ஆம் ஆண்டின் பதிவு சட்டத்தின் கீழ் துணைப் பதிவாளர் அலுவலகத்தில் சொத்தை பதிவு செய்வதற்கு முன், பில்டரிடம் விற்பனைப் பத்திரத்தில் கையெழுத்திடுவார்கள். சொத்து-கட்டிடம், அதன் அனைத்து அடுக்குமாடி குடியிருப்புகள், லிஃப்ட், ஜெனரேட்டர்கள், தீயணைப்பு உபகரணங்கள், குளம், உடற்பயிற்சி கூடம் போன்ற பொதுவான வசதிகள்-ஒவ்வொரு அடுக்குமாடி குடியிருப்பின் சதவீத பங்கையும் வழங்கும் உரிமை அபார்ட்மெண்டில் வீடு வாங்குபவர்களுக்கு கிடைக்கும்.

சங்கம் அடுக்குமாடி குடியிருப்பை வாங்குபவர் ஒரு ப்ளாட்டில் உள்ள குடியிருப்பு வளாகத்தில் அதன் மீது கட்டப்பட்டுள்ள நிலத்தின் ஒரு பகுதிக்கு சொந்தக்காரர் ஆகிறார். அதேபோல் அபார்ட்மெண்டில் உள்ள அனைத்து வீடு வாங்குபவர்களையும் உள்ளடக்கிய ஒரு சங்கம் உருவாக்கப்படும். இந்த சங்கத்திற்கு அபார்ட்மெண்ட் உள்ள நிலம் சொந்தம் என்பதுதான் உண்மையான சட்டம். ஆனால் கர்நாடகாவில் இங்குதான் பிரச்சனை எழுகிறது.

என்ன பிரச்சனை? கர்நாடக வீடு வாங்குவோர் சங்கத்தின் இயக்குநர் தனஞ்சய பத்மநாபச்சார் கூறுகையில், 'கர்நாடகாவில் அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்கிய உரிமையாளர்களுக்கு அபார்ட்மெண்ட் நிலத்தில் பங்கு இருப்பதை குறிப்பிடுகின்றன, ஆனால் வருவாய் துறையில் நிலப் பதிவுகள் அசல் நில உரிமையாளராக பில்டரை குறிப்பிடுகின்றன. வருவாய்த் துறை பதிவுகளில் இந்த தொழில்நுட்ப பொருத்தமின்மையால், எங்களுக்கு தெரிந்தபடி, கர்நாடகாவில் உள்ள அடுக்குமாடி உரிமையாளர்கள் யாருக்கும் அபார்ட்மெண்ட் நிலம் சட்டப்பூர்வமாக சொந்தமாக இல்லை' என்று கூறுகிறார்.

பில்டர்கள் வழக்கறிஞர் அபிலாஷ் நாயக் இதுகுறித்து கூறியபோது, 'DoD இன் நோக்கம் வெறுமனே அடுக்குமாடி குடியிருப்பை வீடு வாங்குபவர்களுக்கு பதிவு செய்வதாகும். மேலும் அது வீடு வாங்குபவர்களுக்கு நில உரிமையை மாற்றாது. ஏறக்குறைய அனைத்து பில்டர்களும் நிலத்திற்கான பத்திரத்தை பதிவு செய்யாமல் உள்ளனர். மேலும் நிலம் ஒருபோதும் சங்கத்திற்கு மாற்றப்படாது. இந்த பிரச்சனை கர்நாடகா முழுவதும் உள்ளது என்று கூறுகிறார்.

வழக்கு 2021 ஆம் ஆண்டில், கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் இதுகுறித்து ஒரு பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தற்போது நீதிமன்றத்தில் உள்ளது. இந்த வழக்கின் தீர்ப்பு வெளிவந்தால் மட்டுமே அபார்ட்மெண்ட் வீடு வாங்குபவர்களுக்கே நிலம் சொந்தமா? என்பது குறித்த தெளிவு ஏற்படும்.

About Us https://bit.ly/3GUPFOa +919942258153 kvk.subadhra@gmail.com
Thank You Very Much for Sharing YourValuable Thoughts
https://c96f9408xb3ybu2puxxb3eef1d.hop.clickbank.net

Loading comments...