Income of Rs. 1 crore from plastic waste.. Amazing Delhi Kanika..!

1 year ago
7

http://destyy.com/edc6Gt

By Pugazharasi S
Updated: Wednesday, July 20, 2022, 16:09 [IST]

Income of Rs. 1 crore from plastic waste.. Amazing Delhi Kanika..!

By Pugazharasi updated: Wednesday, July 20, 2022, 16:09 [IST]
நம்மில் பலருக்கும் சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். ஆனால் அதனை எப்படி செய்வது? என்ன செய்வது? சென்னையில் ப்ரீமியம் 2 & 3 பிஹெச்கே கார்னர் வீடுகள் @94 லட்சம்* முதல் குறிப்பாக சுற்றுசூழலை மேம்படுத்தும் விதமாக தொழில் செய்வது எனில் எந்த மாதிரியான தொழிலை செய்வது? என்ற பல கேள்விகள் எழும். by TaboolaSponsored Links

ஆனால் அதனை எல்லாம் முறியடித்து இன்று வெற்றிகரமாய் வலம் வந்து கொண்டிருக்கும் டெல்லியை சேர்ந்த பெண்னை பற்றித் தான் பார்க்க இருக்கிறோம். வரலாறு காணாத சரிவில் ரூபாய்.. இந்த சமயத்தில் எப்படி லாபம் பார்ப்பது?

பிளாஸ்டிக் கழிவுகள் மூலம் தொழில் டெல்லியை சேர்ந்த பெண் தொழிலதிபரான கனிகா அஹூஜா பிளாஸ்டிக் கழிவுகளை பயன்படுத்தி பைகள், லேப்டாப் ஸ்லீவ்கள், பாய்கள் மற்றும் ஃபேஷன் பொருட்களாக மாற்றும் லிஃபாஃபாவை (Lifaffa ) அறிமுகம் செய்துள்ளார். இது பிளாஸ்டிக் கழிவுகளை மலைபோல் குவியாமல் தடுக்க உதவும். அதோடு கண்னை கவரும் பொருட்களாகவும் மாற்ற உதவும்.

குழந்தையாக இருந்தபோது ஏற்பட்ட அனுபவம் லிஃபாஃபாவின் நிறுவனரான கனிகா, அவர் சிறு குழந்தையாக இருந்தபோது ஒரு குப்பை கிடங்கிற்கு சென்றதை நினைவு கூர்ந்துள்ளார்.அதனை சிறிய குன்று என கருதி அதன் மீது ஏற நினைத்தேன். அங்கு பல குழந்தைகள் விளையாடுவதை கண்டேன். ஆனால் நான் விளையாட விடாமல் தடுத்து நிறுத்தப்பட்டேன். அதனால் எனக்கு உடல் நிலை சரியில்லாமல் போகலாம். இதனால் எனக்கு காயம் ஏற்படலாம் என்று என்னிடம் கூறினார்கள்.

என்ஜிஓ கடந்த 1998ம் ஆண்டில் கனிகாவின் பெற்றோர்களான அனிதா மற்றும் ஷலப் அஹூஜா கன்சர்வ் இந்தியா என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தினை நிறுவினர். அவர்கள் டெல்லியில் இருந்த பிளாஸ்டிக் அச்சுறுத்தலை போக்க பணியாற்ற தொடங்கினர். இதில் கனிகாவின் பெற்றோர் ஆர்வம் காட்டிய நிலையில், கனிகாவை இதில் சேர்ப்பதில் ஆர்வம் காட்டவில்லை என்றும் கூறியுள்ளார்.

கல்வி தகுதி குறிப்பாக கனிகாவின் தந்தை இதனை விரும்பவில்லை என கனிகா தி பெட்டர் இந்தியாவுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். பெற்றோரின் வழிகாட்டல் படி மணிபால் இன்ஸ்டிட்யூட்டில், கர்நாடகாவில் பொறியியல் படிக்க தொடங்கியதாகவும், டெல்லி எஸ்ஆர்சிசி-யில் எம்பிஏவும் படித்துள்ளார்.

வளர்ச்சி துறையில் செல்ல ஆர்வம் அதன் பிறகு படிப்பினை முடித்த கையோடுஇ 2015ல் ஒரு மார்கெட்டிங் ரிசர்ச் நிறுவனத்தில் பணிபுரிய தொடங்கியுள்ளார். அந்த நிறுவனத்தில் பணிபுரிந்தபோது தான், மாற்றத்தினை கொடுக்கும் ஒரு வளர்ச்சி துறையில் இருக்க நான் விரும்பினேன். அதன் பிறகு 2016ல் கனிகாவின் பெற்றோர் தொடங்கிய என் ஜிஓ-விலும் இணைந்தேன்.

லிஃபாஃபா தொடக்கம் எப்படி? அதன் பிறகு இதனை ஏன் ஒரு ஏற்றுமதி நிறுவனமாக மாற்ற கூடாது என உணரப்பட்டு, அதனை மறுபரிசீலனை செய்யவும் முடிவு செய்தோம். இதன் ஆராய்ச்சி முடிவில் தான் லிஃபாஃபாவின் தொடக்கத்திற்கு வழிவகுத்தது. இது இந்தியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் அப்சைக்கிள் செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை வடிவமைத்து சந்தைப்படுத்தும் ஒரு பிராண்டாகவும் உருவெடுத்தது.

பல பொருட்கள் தயாரிப்பு இன்று கிட்டத்தட்ட 12 டன் பிளாஸ்டிக் கழிவுகள், வாலட்களாகவும், பைகள், லேப்டாப் ஸ்லீவ்கள், மேசை விரிப்புகள் போன்ற பல பொருட்கள் செய்யப்படுகின்றது. இவை ஆண்டுதோறும் மறுசுழற்சி செய்யப்படுகின்றது. இதன் மூலம் பிளாஸ்டிக்குகளை குப்பை தொட்டிகளில் குவிவதை தடுக்க முடிகிறது.

சிங்கிள் யூஸ் பிளாஸ்டிக் டூ பைகள் கடந்த நிதியாண்டில் 1 கோடி ரூபாய் வருவாயினை தாண்டிய வணிகமானது, இந்த ஆண்டில் அதன் சாதனையை முறியடிக்க தயாராக உள்ளது. ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி செய்யவும், அதன் மூலம் பல கண்டுபிடிப்புகளை உருவாக்கவும் தொடங்கினோம். ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் கழிவுகளை பைகளாக மாற்றும் தொழில் நுட்பத்தினை கண்டறிந்தோம். அதில் வெற்றியும் கண்டுள்ளோம்.

நிதியுதவி இந்தியாவில் நிராகரிக்கப்பட்ட இதனை மேம்படுத்தி உற்பத்தி முறையை நோக்கி நகர்வதே இதன் நோக்கம். லிஃபாஃபாவை உலகம் முழுக்க எடுத்து செல்வதில் ஆர்வம் கொண்டுள்ளது. அதோடு லிஃபாஃபாவின் செயலை ஊக்கப்படுத்தும் விதமாக உலகலாவிய நிதி நிறுவனமான அசோகாவிடம் இருந்து ஆரம்ப நிதியுதவி கிடைத்தது. இதுவே எங்களுக்கு மிகப்பெரிய உந்துதலை அளித்தது.

அழகான பல வண்ணங்களில் பொருட்கள் அதன் பிறகே நாங்கள் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் பிளாடிக்கினை மறுசுழற்சி செய்வதற்கும், மறுசுழற்சி செய்யப்பட்ட பொருள் மூலம் நிலையான பொருட்களை உருவாக்குவதற்கும் தொடங்கினோம். அந்த நேரத்தில் இது குறித்த விழிப்புணர்வு யாரிடமும் அதிகம் இல்லை. இதனை யாரும் சேகரிக்கவும் இல்லை.

ஆனால் லிஃபாஃபா அதனை துணியாக மாற்றும் செயலை தொடங்கியது. அதனை பயன்படுத்தி அழகான வண்ணங்களில் நாங்கள் பல பொருட்களாக உருவாக்கி வருகின்றோம் என கனிகா கூறுகின்றார். இது சரியான அடித்தளம் கடந்த 2017ம் ஆண்டில் லாக்மீ பேஷன் வீக் எங்களுக்கு ஒரு நல்ல அடித்தளமாக அமைந்தது. அதில் நாங்கள் எங்கள் பொருட்களை காட்சி படுத்தினோம். நல்ல வரவேற்பு கிடைத்தது.

About Us https://bit.ly/3GUPFOa +919942258153 kvk.subadhra@gmail.com
Thank You Very Much for Sharing YourValuable Thoughts
https://f6bcf6t9y430p34cw2e331cobk.hop.clickbank.net

Loading comments...