This 1 rich cream is enough to keep your skin glowing like a marble for 24 hours.

2 years ago
3

http://corneey.com/eddmRl
By Rajesh- Jun 23, 2022, 01:22PM ISTஅழகு குறிப்புகள்
இன்னைக்கு பார்க்கப்போகும் குறிப்பு கொஞ்சம் வித்தியாசமான குறிப்பு. ஆனால் கொஞ்சம் சிரமப்பட்டு இந்த க்ரீமை தயார் செய்து வைத்துவிட்டால், இது 6 மாதங்களுக்கு கெட்டுப்போகாது. பிரிட்ஜ் இல்லாமலேயே 6 மாதம் கண்ணாடி பாட்டிலில் ஸ்டோர் செய்து வைத்துக்கொள்ளலாம். பவர்ஃபுல்லான ஒரு ரிச் க்ரீமை தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இந்த கிரீம் தயார் செய்ய நமக்கு மூன்று பொருட்கள் மட்டும் போதும். இப்போது எல்லா பொருட்களும் ஆன்லைனிலேயே நமக்கு கிடைக்கின்றது. அப்படி ஆர்டர் செய்து வாங்கிக் கொண்டால் கூட சரிதான். இந்த க்ரீமை தயார் செய்து வைத்து தினமும் லேசாக முகத்தில் அப்ளை செய்து வர சரும பிரச்சனைகள் அனைத்திற்கும் நல்லதொரு தீர்வு கிடைக்கும். முகம் பொலிவாக பளபளப்பாக 24 மணிநேரமும் ஜொலித்து கொண்டே இருக்கும்.
நமக்கு தேவையான அந்த மூன்று பொருட்கள் என்னென்ன என்பதை முதலில் பார்த்துவிடுவோம். அதிமதுரப்பொடி, ஷியா பட்டர் (shea butter), ஆலிவ் ஆயில். ஷியா பட்டர் என்பது ஒரு வகையான வெண்ணெய் வகையை சேர்ந்தது. இது நம்முடைய சருமத்தின் கொலாஜன் அளவை அதிகப்படுத்தி சருமத்தை எப்போதும் பொலிவாக வைத்திருக்கும். இந்த மூன்று பொருட்களையும் சேர்த்து பேக்கை எப்படி தயார் செய்வது என்று பார்த்துவிடலாம்.

ஒரு அகலமான பௌலில் அதிமதுரப் பொடி – 1 ஸ்பூன், ஷியா பட்டர் – 2 டேபிள் ஸ்பூன் (organic raw shea butter), ஆலிவ் ஆயில் – 2 டேபிள்ஸ்பூன், இந்த மூன்று பொருட்களையும் ஒன்றாக போட்டு நன்றாக அடித்துக் கலக்க வேண்டும். உங்களுடைய வீட்டில் எலெக்ட்ரிக் பீட்டர் இருந்தால் அந்த பீட்டரை 5 நிமிடம் போல இந்த கலவையில் வைத்து, பீட் செய்து எடுத்தால் ஒரு கிரீம் நமக்கு கிடைத்துவிடும். இந்த கிரீமை ஈரம் படாத பாட்டிலில் போட்டு மூடி போட்டு வெயில் படாத இடத்தில் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். வெயில் பட்டால் வெண்ணெய் உருகி விடும் அல்லவா அதனால் தான்.

உங்களுடைய வீட்டில் எலெக்ட்ரிக் பீட்டர் இல்லை என்றால் ஒரு மரக் கரண்டி வைத்து இந்த கிரீமை கைவிடாமல் அடித்துக் கொடுக்க வேண்டும். கேக் மேலே போடக்கூடிய கிரீம் போல வெண்ணெய் அப்படியே புசுபுசுவென வரும். அந்த அளவிற்கு அடித்துகலக்க வேண்டும்.
- Ad
Apprendre à parler une langue

இந்த க்ரீமை இரவு தூங்க செல்லும் போது கூட உங்களுடைய முகத்தில் லேசாக அப்ளை செய்து விட்டு அப்படியே விட்டு விடலாம். மறுநாள் காலை எப்போதும் போல முகத்தை கழுவிக் கொள்ளலாம். இந்த பேக்கை திக்காக போட்டுக் கொள்ள வேண்டும் என்ற அவசியம் கிடையாது. முகத்திற்கு சீரம் பயன்படுத்துவோம் அல்லவா அதேபோல கண்ணுக்கே தெரியாமல் அப்ளை செய்து விட்டுவிடுங்கள். தினமும் இந்த கிரீமை பயன்படுத்தலாம். தொடர்ந்து பயன்படுத்தி வர உங்களுடைய சருமம் எவ்வளவு பொலிவை மாறுகிறது என்பதை நீங்களே பாருங்கள்.

உங்களுக்கு சருமத்தில் நிறைய எண்ணெய் வழியும் என்றால் ஆலிவ் ஆயிலுக்கு பதிலாக பாதாம் எண்ணெய் தேங்காய் எண்ணெய் இப்படி வேறு எண்ணெய்யை கூட மாற்றிக் கொள்ளலாம். அது நம்முடைய விருப்பம் தான். ஆனால் கட்டாயமாக இந்த ஷியா பட்டர் சேர்த்து தான் ஆக வேண்டும். வித்தியாசமான பொருட்களை சேர்த்து வித்தியாசமாக செய்யக்கூடிய குறிப்பு இது. ட்ரை பண்ணி பாருங்க. ரிசல்ட் பெர்ஃபெக்டா கிடைக்கும்.

About Us https://bit.ly/3GUPFOa Contact: +919942258153 kvk.subadhra@gmail.com
Thank You Very Much for Sharing YourValuable Thoughts
https://2bd637u209wxnw7pzdg5mbo4i5.hop.clickbank.net

Loading comments...