நவம்பர் | தினசரி தியானம்
20 videos
Updated 15 hours ago
மானுட அமைப்பில் உடலினும் உயர்ந்தது உள்ளம். உடலில் ஏதேனும் குறைபாடு இருந்தால் அதை முன்னிட்டு மனிதன் கீழோனாகக் கருதப்படமாட்டான். ஆனால் மனத்தில் நேர்மையும் ஒழுக்கமும் நல்லறிவும் அமையப் பெறாதிருக்குமளவு அவன் புன்மையன் ஆவான். மனத்தை மாண்புறச் செய்யுமளவு மனிதன் மேலோன் ஆகிறான்.
உணவு ஊட்டி உடலை வளர்க்கிறோம். அப்படி உடலைப் பேணுவது உயிர்கள் அனைத்துக்கும் பொதுவானது. பின்பு உள்ளத்தைப் பேணுவது மனிதனுடைய தனிச்செயல் ஆகிறது. நல்லுணவையே உடலுக்குத் தரவேண்டும்; உணவு வெவ்வேறு வகைப்பட்டதாக இருக்கவேண்டும். விதவிதமான உணவு நாவுக்கு இனியதும் உடலுக்கு உறுதி தருவதும் ஆகும். நல்லெண்ணமும் நல்லுணர்வும் உள்ளத்துக்கு உணவு ஆகின்றன. எத்தனைவிதமான நல்லெண்ணங்களை எண்ணுகின்றோமோ அத்தனை விதங்களில் உள்ளம் உறுதிபெறும், மனத்துக்கு இனிய நல்லுணவு ஆவது "தினசரிதியானம்". அன்றாடம் வழிபாட்டுக்குப் பிறகு ஓர் எண்ணத்தை இதனின்று பெறலாம். பிறகு அதைப்பற்றிச் சிந்தனை பண்ணுவது அவசியம். சிந்திக்குமளவு அந்த மூலக்கருத்தில் வெவ்வேறு கிளை எண்ணங்களும் உள்ளத்தில் உதிக்கும். உள்ளத்தினுள் பக்தியையும் ஞானத்தையும் வளர்ப்பதற்கு இது உற்றதோர் உபாயம்.
தேதியை ஆங்கில முறையில் அல்லது தமிழ் முறையில் அவரவர் விருப்பம்போல் பின்பற்றலாம். சில வருடங்களில் ஆங்கிலத் தேதியும் தமிழ்த்தேதியும் ஒத்திருக்கும்; வேறு சில வருடங்களில் ஒருநாள் முன்னது பின்னதாக இருக்கும். "தினசரி தியானம்" என்னும் தலைப்புக் கொடுத்து இயற்றியுள்ள இந்நூலில் அடங்கி இருக்கிற கருத்துக்கள் ஆத்ம சாதனத்துக்கு நன்கு உதவும் என்பது சொல்லாமலே விளங்கும்.
திருப்பராய்த்துறை 20-8-60
சுவாமி சித்பவானந்த.
#tamil #devotional #lifetraining #shortstory #thoughtfulness #spirituality #mindandsoul #purityoflife
-
நவம்பர் 20 | இயற்கையில் நம்பிக்கை | தினசரி தியானம்
தினசரி தியானம்குடியானவன் ஒருவன் நெற்றி வியர்வை நிலத்தில் விழப் பாடுபடுகிறான்; பூமியைத் திருத்தியமைக்கிறான்; பருவத்தில் விதை விதைக்கிறான். பிறகு அவள் முற்றிலும் இயற்கையை நம்பியிருக்கிறான். மழை, காற்று, வெயில் முதலியன முறையாக அமையவேண்டுமென்று வழுத்துகிறான். இயற்கையில் வைக்கும் நம்பிக்கையும் தெய்வத்திடம் வைக்கும் நம்பிக்கையும் ஒன்றேயாம்.1 view -
நவம்பர் 19 | சண்டையிடல் | தினசரி தியானம்
தினசரி தியானம்முற்றிலும் பரிபக்குவம் அடைந்திருப்பவன் மற்றவர்களோடு சண்டையிடுவதில்லை.பிறர் கூறும் கடுஞ் சொல்லை அவன் இன்சொல் கொண்டு எதிரழைக்கிறான். சினத்துக்கு அவன் உள்ளத்தில் இடம் கொடுப்பதில்லையாதலால் பிறர் சினம் அவன் முன்னிலையில் மாயமாய் மறைந்து போய்விடுகிறது.1 view -
நவம்பர் 18 | வைகறையில் துயில் எழு | தினசரி தியானம்
தினசரி தியானம்சூரியோதயத்துக்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பே பிரம்ம முகூர்த்தம் உச்சத்துக்கு வந்து விடுகிறது. அப்பொழுது தூங்கிக் கொண்டிருப்பவர்களுக்கு அருள் துறையிலோ, பொருள் துறையிலோ முன்னேற்றமில்லை. வைகறையில் விழித்தெழுந்திருப்பவர்க்கு எல்லாவித முன்னேற்றமும் உண்டு. -
-
நவம்பர் 16 | பொறுமை | தினசரி தியானம்
தினசரி தியானம்அமைதி ஆற்றலுக்கு அறிகுறி. பயிற்சியில் பண்பாடு அடைந்து பொறுமையுடன் இருக்கும் மனத்தில் ஆற்றல் மிக உண்டு. எப்படி வினையாற்றுவது என்பது பொறுமையானவனுக்குத் தெரியும். அவன் வீண் பேச்சுப் பேசான். அவனுடைய வேலைத்திட்டம் யந்திரம் போன்று ஒழுங்கானது. முன்யோசனை அவனுக்கு மிகவுண்டு. நாடிய கருமத்தை முறையாக அவன் செய்து முடிப்பான். இதுவே பொறுமையின் விளைவு.1 view -
நவம்பர் 15 | பூனையின் பல் | தினசரி தியானம்
தினசரி தியானம்பூனையின் பல் கருணைக்கு இருப்பிடமா. கொடூரத்துக்கு இருப்பிடமா? பூனைக்குட்டி அது கருணைக்கு இருப்பிடம் என்று சொல்லும். ஆனால் எலியோ அது கொடூரத்துக்கு இருப்பிடம் என இயமபும். உலகம் நல்லதா, கெட்டதா என்னும் கேள்வி எழுகிறது. கடவுள் மயமாய் அதைக் காண்பவனுக்கு அது நல்லது; மற்றவனுக்கு அது கெட்டது.1 view -
நவம்பர் 14 | பிண நெஞ்சு | தினசரி தியானம்
தினசரி தியானம்அடுப்புக்கரி தன்னளவில் கன்னங்கறேரென்று கிடக்கிறது. ஆனால் அதைத் தீயுடன் சேர்த்தால் அது தேஜோமயமாகத் திகழ்கிறது. மனம் அதுபோன்றது. உலக விஷயங்களில் சேர்ந்தால் அது பிண நெஞ்சு. பரம்பொருளைச் சார்ந்தால் அது சித்சொரூபம் ஆகிறது.1 view -
நவம்பர் 13 | சாக்ஷி | தினசரி தியானம்
தினசரி தியானம்அழகிய படம் ஒன்றை ஒருவன் விலைக்கு விற்கிறான். மற்றொருவன் வாங்குதற்குப் பேரம் பண்ணுகிறான். இருவர் கருத்தும் விலையிலேயே சென்று கொண்டிருக்கிறது. வழிப்போக்கன் ஒருவனோ படத்தின் ஓவியத் திறமையை ரசித்துக் கொண்டிருக்கிறான். பிரபஞ்சம் என்னும் படத்தை அதற்குச் சாக்ஷியாயிருப்பவனே ரசிக்கிறான். அதில் கட்டுண்டிருப்பவன் ரசிப்பதில்லை.1 view 1 comment -
நவம்பர் 12 | பசித்திரு | தினசரி தியானம்
தினசரி தியானம்பசியெடுத்திருப்பவனுக்கு உறக்கம் இல்லை. உணவை அவன் நாடுகிறான். கடவுளை அடைய வேண்டும் என்ற பசி யாருக்கு வருகிறதோ அவன் பாக்கியவான். யாரும் புகட்டாது அருள் நாட்டம் தானாகவே அவனுக்கு வந்துவிடுகிறது.1 view -
நவம்பர் 11 | தனித்திரு | தினசரி தியானம்
தினசரி தியானம்மனிதன் உலகுக்குள் வந்தது தனியாக. அவன் உலகைவிட்டு ஏகுவது தனியாக. உலகில் இருக்கும்பொழுதும் இடையிடையே அவன் தனித்திருந்து பழகவேண்டும். பாரமார்த்திக வாழ்வுக்குப் பக்குவம் ஆகாதவன் தனித்திருக்க முடியாது. பக்குவப்பட்டவனுக்கு அது தெய்வசான்னித்தியத்துக்கு ஒப்பானது.