நவம்பர் | தினசரி தியானம்
8 videos
Updated 7 hours ago
மானுட அமைப்பில் உடலினும் உயர்ந்தது உள்ளம். உடலில் ஏதேனும் குறைபாடு இருந்தால் அதை முன்னிட்டு மனிதன் கீழோனாகக் கருதப்படமாட்டான். ஆனால் மனத்தில் நேர்மையும் ஒழுக்கமும் நல்லறிவும் அமையப் பெறாதிருக்குமளவு அவன் புன்மையன் ஆவான். மனத்தை மாண்புறச் செய்யுமளவு மனிதன் மேலோன் ஆகிறான்.
உணவு ஊட்டி உடலை வளர்க்கிறோம். அப்படி உடலைப் பேணுவது உயிர்கள் அனைத்துக்கும் பொதுவானது. பின்பு உள்ளத்தைப் பேணுவது மனிதனுடைய தனிச்செயல் ஆகிறது. நல்லுணவையே உடலுக்குத் தரவேண்டும்; உணவு வெவ்வேறு வகைப்பட்டதாக இருக்கவேண்டும். விதவிதமான உணவு நாவுக்கு இனியதும் உடலுக்கு உறுதி தருவதும் ஆகும். நல்லெண்ணமும் நல்லுணர்வும் உள்ளத்துக்கு உணவு ஆகின்றன. எத்தனைவிதமான நல்லெண்ணங்களை எண்ணுகின்றோமோ அத்தனை விதங்களில் உள்ளம் உறுதிபெறும், மனத்துக்கு இனிய நல்லுணவு ஆவது "தினசரிதியானம்". அன்றாடம் வழிபாட்டுக்குப் பிறகு ஓர் எண்ணத்தை இதனின்று பெறலாம். பிறகு அதைப்பற்றிச் சிந்தனை பண்ணுவது அவசியம். சிந்திக்குமளவு அந்த மூலக்கருத்தில் வெவ்வேறு கிளை எண்ணங்களும் உள்ளத்தில் உதிக்கும். உள்ளத்தினுள் பக்தியையும் ஞானத்தையும் வளர்ப்பதற்கு இது உற்றதோர் உபாயம்.
தேதியை ஆங்கில முறையில் அல்லது தமிழ் முறையில் அவரவர் விருப்பம்போல் பின்பற்றலாம். சில வருடங்களில் ஆங்கிலத் தேதியும் தமிழ்த்தேதியும் ஒத்திருக்கும்; வேறு சில வருடங்களில் ஒருநாள் முன்னது பின்னதாக இருக்கும். "தினசரி தியானம்" என்னும் தலைப்புக் கொடுத்து இயற்றியுள்ள இந்நூலில் அடங்கி இருக்கிற கருத்துக்கள் ஆத்ம சாதனத்துக்கு நன்கு உதவும் என்பது சொல்லாமலே விளங்கும்.
திருப்பராய்த்துறை 20-8-60
சுவாமி சித்பவானந்த.
#tamil #devotional #lifetraining #shortstory #thoughtfulness #spirituality #mindandsoul #purityoflife
-
நவம்பர் 08 | அரண் | தினசரி தியானம்
தினசரி தியானம்வாழ்வுக்கு உறுதுணையாவது அன்பு. மேலும் அன்பின் வழியது உயிர்நிலை. தடைகளையெல்லாம் தகர்க்கவல்லது அன்பு. வெறுப்பு, பகை, துன்பம் என்னும் எதிரிகளையெல்லாம் உள்ளே வரவொட்டாது தடுக்கும் அரண் ஆக அமைந்திருப்பதும் அன்பு. அதினின்று உலப்பில்லாத பேரானந்தம் பிறக்கிறது. -
நவம்பர் 07 | நேர்மை | தினசரி தியானம்
தினசரி தியானம்நேர்மையில் ஒழுகுகிறவன் மறைத்து வைப்பதற்கு ஒன்றுமில்லை. திருட்டுத்தனமாய் அவன் எதையும் செய்வதில்லை. பொருந்தாத ஆசைக்கு அவன் அடிமைப்படுவதில்லையாதலால் அவன் யாருக்கும் அஞ்சுவதில்லை. ஏறுபோல் அவன் நடக்கிறான், நிமிர்ந்திருக்கிறான்; தெளிவுறப் பேசுகிறான்; நேரே முகத்தைப் பார்க்கிறான். அவனே நேர்மைக்கு விளக்கமாகிறான்.1 comment -
நவம்பர் 06 | நீ ஏழையா? | தினசரி தியானம்
தினசரி தியானம்பொருள் குறைந்து போய்விட்டதினால் நீ ஏழையாய் விட்டாயா? ஏழ்மை பொருளைப் பொறுத்ததன்று. உடைமையில் வறியர் பலர் இருக்கின்றனர். மனவுறுதி படைத்திருப்பவன் ஏழையல்லன். கஷ்டதசையையும் மனவுறுதி ஒழுங்குப்படுத்தி விடுகிறது. கஷ்டகாலத்தை முன்னிட்டு மனம் தளர்வுறுபவன் ஏழை. அதை உறுதியுடன் சமாளிப்பவன் ஏழையல்லன். -
நவம்பர் 05 | வருந்துதற்கு ஒன்றுமில்லை | தினசரி தியானம்
தினசரி தியானம்தரையில் நிற்பவர்களுக்கு மேடுகளும் மடுக்களும் தென்படுகின்றன. மலையுச்சியினின்று பார்ப்பவர்க்கோ எல்லாம் ஒரே சமவெளியாம். அண்டத்தின் பேரமைப்பை உள்ளபடி காண்கின்றவர்களுக்கு அதன் நடைமுறையில் குறைபாடு ஒன்றும் தென்படுவதில்லை.ஆதலால் அவர்களுக்கு வருந்துதற்கு ஒன்றுமில்லை.1 view -
நவம்பர் 04 | ஊழ் | தினசரி தியானம்
தினசரி தியானம்அறையில் உள்ள குளிரோ, வெப்பமோ, குப்பையோ, குடியிருப்பவனால் உணரப்படுகிறது. ஊழை முன்னிட்டு உடலுக்கு வரும் நலம் கேடுகளை ஆத்மா உணருகிறது. ஆனால் அவைகளை உணராதிருந்து பழகவேண்டும்.1 view -
நவம்பர் 03 | மின் விளக்கு | தினசரி தியானம்
தினசரி தியானம்இருட்டறையில் இருக்கும் மின்விளக்கு மற்ற பொருள்களைப் போன்று மறைந்து கிடக்கிறது. ஆனால் அதனுள் மின்சக்தி வந்ததும் அது சுடர் விளக்கு ஆகிறது. ஜோதி சொரூபமாகிய அது அறையில் உள்ள பொருள்களையெல்லாம் விளக்குகிறது. அங்ஙனம் இறைவன் அருளால் ஜீவாத்மாக்கள் தங்களை உணர்கின்றனர், ஏனைய பொருள்களையும் பார்க்கின்றனர். -
நவம்பர் 02 | சப்பாணிப் பருவம் | தினசரி தியானம்
தினசரி தியானம்பிறந்த குழந்தை மல்லாந்து கிடக்கிறது; முயன்று குப்புறப் படுக்கிறது; தவழ்கிறது; நிற்கிறது; வீழ்கிறது; பிடித்து நடக்கிறது; தத்தி நடக்கிறது; பின்பு நேரே நடக்கிறது. இறை வணக்சகத்தில் சாதகன் அப்படி முயன்று முயன்று மேல் நிலைக்கு வரவேண்டும்.1 view -
நவம்பர் 01 | சில்லறை மாற்றுதல் | தினசரி தியானம்
தினசரி தியானம்பொன் காசு ஒன்றுக்குச் சில்லரை மாற்றினால் பை நிறைய தாமிரக் காசுகள் கிடைக்கும். சிறிய பண்டங்களை விலைக்கு வாங்குதற்கும் அவைகள் உதவும். ஆனால் அவைகளின் மதிப்போ குறைவானது. கடவுளைப் பற்றி மனத்தில் உணர்வது பொற் காசு போன்றது. அவரைப் பற்றிப் பேசுவது தாமிரச் சில்லரைக் காசு போன்றது.