அக்டோபர் | தினசரி தியானம்
31 videos
Updated 20 days ago
மானுட அமைப்பில் உடலினும் உயர்ந்தது உள்ளம். உடலில் ஏதேனும் குறைபாடு இருந்தால் அதை முன்னிட்டு மனிதன் கீழோனாகக் கருதப்படமாட்டான். ஆனால் மனத்தில் நேர்மையும் ஒழுக்கமும் நல்லறிவும் அமையப் பெறாதிருக்குமளவு அவன் புன்மையன் ஆவான். மனத்தை மாண்புறச் செய்யுமளவு மனிதன் மேலோன் ஆகிறான். உணவு ஊட்டி உடலை வளர்க்கிறோம். அப்படி உடலைப் பேணுவது உயிர்கள் அனைத்துக்கும் பொதுவானது. பின்பு உள்ளத்தைப் பேணுவது மனிதனுடைய தனிச்செயல் ஆகிறது. நல்லுணவையே உடலுக்குத் தரவேண்டும்; உணவு வெவ்வேறு வகைப்பட்டதாக இருக்கவேண்டும். விதவிதமான உணவு நாவுக்கு இனியதும் உடலுக்கு உறுதி தருவதும் ஆகும். நல்லெண்ணமும் நல்லுணர்வும் உள்ளத்துக்கு உணவு ஆகின்றன. எத்தனைவிதமான நல்லெண்ணங்களை எண்ணுகின்றோமோ அத்தனை விதங்களில் உள்ளம் உறுதிபெறும், மனத்துக்கு இனிய நல்லுணவு ஆவது "தினசரிதியானம்". அன்றாடம் வழிபாட்டுக்குப் பிறகு ஓர் எண்ணத்தை இதனின்று பெறலாம். பிறகு அதைப்பற்றிச் சிந்தனை பண்ணுவது அவசியம். சிந்திக்குமளவு அந்த மூலக்கருத்தில் வெவ்வேறு கிளை எண்ணங்களும் உள்ளத்தில் உதிக்கும். உள்ளத்தினுள் பக்தியையும் ஞானத்தையும் வளர்ப்பதற்கு இது உற்றதோர் உபாயம். தேதியை ஆங்கில முறையில் அல்லது தமிழ் முறையில் அவரவர் விருப்பம்போல் பின்பற்றலாம். சில வருடங்களில் ஆங்கிலத் தேதியும் தமிழ்த்தேதியும் ஒத்திருக்கும்; வேறு சில வருடங்களில் ஒருநாள் முன்னது பின்னதாக இருக்கும். "தினசரி தியானம்" என்னும் தலைப்புக் கொடுத்து இயற்றியுள்ள இந்நூலில் அடங்கி இருக்கிற கருத்துக்கள் ஆத்ம சாதனத்துக்கு நன்கு உதவும் என்பது சொல்லாமலே விளங்கும். திருப்பராய்த்துறை 20-8-60 சுவாமி சித்பவானந்த. #tamil #devotional #lifetraining #shortstory #thoughtfulness #spirituality #mindandsoul #purityoflife
-
அக்டோபர் 31 | செயலும் சாந்தியும் | தினசரி தியானம்
தினசரி தியானம்ஹிருதயம் ஓயாது அடித்துக் கொண்டிருக் கிறது. அதனால் அது களைப்புறுவதில்லை. உடல் அங்ஙனம் உழைத்துக்கொண்டிருக்கட்டும். மனம் சாந்தியில் நிலைத்திருந்தால் உழைக்கிற உடலுக்கு ஆயாசம் உண்டாகாது. வினையாற்றுதலும் விச்ராந் தியும் சேர்ந்தே நிகழ்கின்றன.5 views -
அக்டோபர் 30 | சோம்பல் | தினசரி தியானம்
தினசரி தியானம்ஆத்ம சாதனத்துக்குப் பேரிடைஞ்சலாயிருப்பது சோம்பல். அதை அகற்ற இயலாதவர்க்கு முன்னேற்றமில்லை. தேவைக்குமேல் உடலுக்கு ஓய்வும். உறக்கமும் கொடுத்தால் அது சோம்பலாகும். இன்று செய்து முடிக்க வேண்டியதை நாளைக்கென்று ஒத்திவைப்பது சோம்பல்.3 views 1 comment -
அக்டோபர் 29 | ஞானம் | தினசரி தியானம்
தினசரி தியானம்ஜடப்பொருள்களுள் வேற்றுமை காண்பதும் ஜீவர்களுக்கிடையில் வேற்றுமை காண்பதும் அக்ஞானம். அவை யாவும் ஒரே மூலப் பொருளிடத்திருந்து தோற்றத்துக்கு வந்துள்ளன. ஒரு பொருளே பலவாய்த் தோன்றிக்கொண்டிருக்கிறது என்பதை அறிந்து கொள்வது ஞானம். -
அக்டோபர் 28 | சம்யோகம் | தினசரி தியானம்
தினசரி தியானம்கடலினுக்குப் புறம்பாக அலைக்கு வியக்தியில்லை. கடவுளுக்குப் புறம்பாக மனிதனுக்கு வியக்தியில்லை. கடலைச் சார்ந்திருந்தே அலை தன் வலிவைப் பெறுகிறது. கடவுளைச் சார்ந்திருந்தே மனிதன் தனது ஆற்றலைப் பெறுகிறான். தனக்குரிய யாவையும் கடவுளிடத்திருந்து பெறுவது சம்யோகம்.1 view -
அக்டோபர் 27 | கிரியை | தினசரி தியானம்
தினசரி தியானம்வயது வரும்பொழுது ஒவ்வொரு மனிதனும் வினையாற்றத் தகுதியுடையவன் ஆகிறான். அவன் புரியும் கருமம் அவனுக்கு மட்டுமல்லாது உலகுக்கும் நன்கு பயன்படவேண்டும். அத்தகைய கருமத்தைக் கடவுளுக்கென்றே செய்வது கிரியை ஆகிறது.2 views -
அக்டோபர் 26 | சரியை | தினசரி தியானம்
தினசரி தியானம்ஒரு குடும்பத்துள் பிறந்து வளரும் குழந்தைக்கு முதலில் வாழ்க்கைமுறை புகட்டப்படுகிறது. பெற்றோர் சொற்படி அது பணிந்து நடக்கவேண்டும். பெற்றோர் ஒழுகுவதைப் பார்த்தும் அது பின்பற்றுகிறது. பழக்கத்தால் நல்ல வாழ்க்கை வாழுதலில் படிந்துவிடுவது சரியை.1 view -
அக்டோபர் 25 | பரபோதம் | தினசரி தியானம்
தினசரி தியானம்மாறுபடும் இரண்டு எண்ணங்கள் மனத்தில் ஏக காலத்தில் வருவதில்லை. ஓர் எண்ணத்தில் அது ஊறியிருக்கும்போது ஏனைய எண்ணங்கள் அடிபட்டுப் போய்விடுகின்றன. பரபோதம் என்னும் பேரறிவில் எண்ணங்கள் யாவும் அடிபட்டுப் போய்விட்டால் பேரறிவே எஞ்சி நிற்கும்.1 view -
அக்டோபர் 24 | கடலின் அடிமட்டம் | தினசரி தியானம்
தினசரி தியானம்கடலின் மேற்பகுதியில் அலை வீசுகிறது. மலை போன்று அது உயர எழுகிறது. ஆனால் ஆழமான அடிமட்டத்தில் அது அசையாதிருக்கிறது. மனிதனுடைய மனத்தின் அடிப்பகுதி அங்ஙனம் அசையாதிருக்கவேண்டும். தெய்வ சாந்தி நிலவுதற்கு அந்த அடிப்பகுதியே உற்ற இடமாகும்.3 views -
அக்டோபர் 23 | முமுக்ஷுத்வம் | தினசரி தியானம்
தினசரி தியானம்தண்ணீருக்குள் அமிழ்த்தி வைக்கப்பட்டிருப்பவனுக்கு வேறு எந்த விதமான நாட்டமும் உண்டாவதில்லை. சுவாசிப்பதற்குக் கொஞ்சம் காற்று கிடைத்தால் போதுமென்று அதன் பொருட்டே அவன் திணறுவான். உயிரைக் காப்பாற்றத் திண்டாடுவது போன்று தெய்வத்தை அடையத் திண்டாடுவது முமுக்ஷுத்வம்.1 view -
அக்டோபர் 22 | சமாதானம் | தினசரி தியானம்
தினசரி தியானம்சமாதானம் வேண்டுமென்று உலகத்தவர் ஓலமிடுகின்றனர். ஆனால் அவர்கள் உள்ளத்தில் ஓயாது பொங்கியெழுந்து கொண்டிருப்பது போராட்டமும் சஞ்சலமுமேயாம். தான், தனது என்பனவற்றைத் துறந்தார்க்கன்றி நிலைத்த சமாதானம் உண்டாகாது.