
செப்டம்பர் | தினசரி தியானம்
28 videos
Updated 14 hours ago
மானுட அமைப்பில் உடலினும் உயர்ந்தது உள்ளம். உடலில் ஏதேனும் குறைபாடு இருந்தால் அதை முன்னிட்டு மனிதன் கீழோனாகக் கருதப்படமாட்டான். ஆனால் மனத்தில் நேர்மையும் ஒழுக்கமும் நல்லறிவும் அமையப் பெறாதிருக்குமளவு அவன் புன்மையன் ஆவான். மனத்தை மாண்புறச் செய்யுமளவு மனிதன் மேலோன் ஆகிறான்.
உணவு ஊட்டி உடலை வளர்க்கிறோம். அப்படி உடலைப் பேணுவது உயிர்கள் அனைத்துக்கும் பொதுவானது. பின்பு உள்ளத்தைப் பேணுவது மனிதனுடைய தனிச்செயல் ஆகிறது. நல்லுணவையே உடலுக்குத் தரவேண்டும்; உணவு வெவ்வேறு வகைப்பட்டதாக இருக்கவேண்டும். விதவிதமான உணவு நாவுக்கு இனியதும் உடலுக்கு உறுதி தருவதும் ஆகும். நல்லெண்ணமும் நல்லுணர்வும் உள்ளத்துக்கு உணவு ஆகின்றன. எத்தனைவிதமான நல்லெண்ணங்களை எண்ணுகின்றோமோ அத்தனை விதங்களில் உள்ளம் உறுதிபெறும், மனத்துக்கு இனிய நல்லுணவு ஆவது "தினசரிதியானம்". அன்றாடம் வழிபாட்டுக்குப் பிறகு ஓர் எண்ணத்தை இதனின்று பெறலாம். பிறகு அதைப்பற்றிச் சிந்தனை பண்ணுவது அவசியம். சிந்திக்குமளவு அந்த மூலக்கருத்தில் வெவ்வேறு கிளை எண்ணங்களும் உள்ளத்தில் உதிக்கும். உள்ளத்தினுள் பக்தியையும் ஞானத்தையும் வளர்ப்பதற்கு இது உற்றதோர் உபாயம்.
தேதியை ஆங்கில முறையில் அல்லது தமிழ் முறையில் அவரவர் விருப்பம்போல் பின்பற்றலாம். சில வருடங்களில் ஆங்கிலத் தேதியும் தமிழ்த்தேதியும் ஒத்திருக்கும்; வேறு சில வருடங்களில் ஒருநாள் முன்னது பின்னதாக இருக்கும். "தினசரி தியானம்" என்னும் தலைப்புக் கொடுத்து இயற்றியுள்ள இந்நூலில் அடங்கி இருக்கிற கருத்துக்கள் ஆத்ம சாதனத்துக்கு நன்கு உதவும் என்பது சொல்லாமலே விளங்கும்.
திருப்பராய்த்துறை 20-8-60
சுவாமி சித்பவானந்த.
#tamil #devotional #lifetraining #shortstory #thoughtfulness #spirituality #mindandsoul #purityoflife
-
செப்டம்பர் 28 | இடிக்கமுடியாத மாளிகை | தினசரி தியானம்
தினசரி தியானம்தனது உள்ளத்தில் மனிதன் கட்டும் மாளிகைக்குத் தூய்மை, நல்லறிவு, இரக்கம், அன்பு ஆகிய நான்கும் நான்கு சுவர்கள் ஆகின்றன. அமைதி அதன் கூரை. சிரத்தை அதன் தளம். இறைவழிபாடு அதன் வாயில். அருள் அதனுள் வீகம் காற்று. ஆனந்தம் ஆங்கு நிகழும் இசை.1 view -
செப்டம்பர் 27 | மாணிக்கம் | தினசரி தியானம்
தினசரி தியானம்குப்பையில் கிடக்கும்போதும், பொன் பெட்டகத்தில் வைத்திருக்கும்போதும் மாணிக்கம் மாணிக்கமே. அன்பு, ஆனந்தம், அமைதி, பொறுமை, இரக்கம் ஆகிய நற்குணங்கள் வாய்க்கப்பெற்ற சான்றோன் எல்லா நிலைகளிலும் சான்றோனாக இருக்கிறான். தன்னைப் போற்றுபவனிடத்தும் தூற்றுபவனிடத்தும் அவன் சான்றோனாயிருக்கிறான். -
செப்டம்பர் 26 | இப்பொழுதே | தினசரி தியானம்
தினசரி தியானம்நல்லாராக எல்லாரும் விரும்புகின்றனர். ஆனால் அதன் பொருட்டு அவர்கள் எதிர்காலத்தை நோக்கி நிற்கின்றனர். பசித்திருப்பவன் இப்பொழுதே புசிக்க விரும்புவது போன்று அருளுக்குப் பாத்திரமாவதற்கு இதுவே தருணம். அதைப் பெற முழு மனத்துடன் இப்பொழுதே முயலவேண்டும்.3 views -
செப்டம்பர் 25 | எழில் வடிவம் | தினசரி தியானம்
தினசரி தியானம்அண்டங்களையெல்லாம் உருவாக்கும் மஹா சிற்பியாக சர்வேசுவரன் இருக்கிறார். என்னை நல்லவனாக உருவாக்கும் சிற்பி நான் ஆவேனாக. உள்ளுறையும் இறைவன் துணைகொண்டு என்னை நான் ஒழுங்குபடுத்தாவிட்டால் வேறு யார்க்கு அது இயலும்?2 views -
செப்டம்பர் 24 | முறை மாற்றம் | தினசரி தியானம்
தினசரி தியானம்நீர்வீழ்ச்சி என்னும் ஆகர்ஷண சக்தியை மின்சக்தியாக மாந்தர் மாற்றியமைக்கின்றனர். போராட்டத்தை மனிதன் அமைதியாக மாற்றவேண்டும். காமத்தைக் கடவுள் பக்தியாக்க வேண்டும். வெறுப்பை அருள் கலந்த இரக்கமாக மாற்றிவிட வேண்டும். அப்பொழுது மனிதன் சான்றோனாக மாறி விடுகிறான்.1 view -
செப்டம்பர் 23 | நைவேத்தியம் | தினசரி தியானம்
தினசரி தியானம்தெய்விகப் பேரியல்பு மனிதனிடத்து மறைந்திருக்கிறது. அதை ஞாபகமூட்டுதற்கான வாழ்வே நல்வாழ்வு ஆகிறது. பிறரோடு மனிதன் செய்கிற இணக்கம் அவர்களிடத்துள்ள பேரியல்பை முன்னணிக்குக் கொண்டு வருவதாயிருக்க வேண்டும். அதை வளர்ப்பதற்கான சொற்களும் செயல்களுமே மேலான சொற்களும் செயல்களும் ஆகின்றன.1 view -
செப்டம்பர் 22 | மேகமண்டலத்துக்கு மேல் | தினசரி தியானம்
தினசரி தியானம்ஆகாய விமானம் மேலே பறக்கிறது. மேக மண்டலத்துக்கு மேலே அது போய்விட்டால் அதன் வேகமான பயணத்துக்குத் தடையொன்றுமில்லை. மனிதன் எண்ணத்தில் மிக உயரமாய்ப் போய்விடு வானானால் உலகத்தவர்களிடமுள்ள குறைபாடு களோடு அவனுக்கு முரண்பாடு உண்டாகாது.1 view -
செப்டம்பர் 21 | நிராசை | தினசரி தியானம்
தினசரி தியானம்பிறவியைப் பெருக்குவது ஆசை. பிரபஞ்ச வாழ்வில் அல்லல்களை உண்டுபண்ணுவது ஆசை. சாந்தியைக் கலைப்பது ஆசை. ஆனந்தத்தை மறைப்பது ஆசை. நிராசையோ மனிதனை தெய்வ சன்னிதியில் சேர்த்துவிடுகிறது.19 views 1 comment -
செப்டம்பர் 20 | பொய்யறவு | தினசரி தியானம்
தினசரி தியானம்உடல் ஓயாது மாறியமைந்து கொண்டிருக்கிறது. நேற்று இருந்ததுபோல் அது இன்று இருப்பதில்லை. திட்பமுற்றிருக்கும்போது தெய்வ வழிபாட்டுக்கு அது நல்ல உறவு ஆகிறது. நோய்வாய்ப் பட்டிருக்கும்போது அது பெருந்தடையாகிறது. எனவே அதன் உறவைப் பொய்யுறவு என்று அறிதல் வேண்டும்.9 views -
செப்டம்பர் 19 | குரங்கு | தினசரி தியானம்
தினசரி தியானம்அடங்காத மனம் குரங்கு போன்றது. அது ஆசை என்னும் கள்ளைக் குடித்துவிட்டது; வெறி பிடித்து ஆடுகிறது. பின்பு பொறாமை என்னும் தேள் அதைக் கொட்டி விட்டது. அப்பொழுது அது படும்பாடு சொல்லி முடியாதது.