காவிரியில் மீண்டும் வெள்ளப் பெருக்கு- வீடியோ

OneIndia_TamilPublished: August 11, 2018
Published: August 11, 2018

கர்நாடக மாநில அணைகளில் இருந்து திறக்கப்பட்டுள்ள கூடுதல் நீரால் காவிரியில் மீண்டும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. தருமபுரி, சேலம் மாவட்டங்களில் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் மீண்டும் தென்மேற்கு பருவமழை வலுத்துள்ளது. அந்த மாநிலத்தில் காவிரியின் குறுக்கே உள்ள கிருஷ்ணராஜ சாகர் அணையில், அதன் உச்சகட்ட நீர்தேக்கும் அளவான 124 புள்ளி 80 அடியில், 124 புள்ளி 25 அடியாக நீர்மட்டம் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 37 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் வரும் நிலையில் அணையின் பாதுகாப்பு கருதி வினாடிக்கு 55 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

இதே போன்று கபினி அணையின் உச்சகட்ட நீர் தேக்கும் அளவான 84 அடியில், 83 புள்ளி 07 அடியாக நீர்மட்டம் உள்ளது. அந்த அணைக்கு வினாடிக்கு 65 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் வரும் நிலையில் கர்நாடகத்தில் இருந்து கூடுதல் நீர் திறக்கப்பட்டுள்ளதால், மேட்டூர் அணை மீண்டும் அதன் முழு கொள்ளளவை எட்டும் வாய்ப்பு உருவாகி உள்ளது. இதனால் தருமபுரி, சேலம் மாவட்டங்களில் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Des : Additional water from the Karnataka State Dams has been flooded again in Cauvery. Flood warning has been issued to the coastal communities in Dharmapuri and Salem districts.

Be the first to suggest a tag

    Comments

    0 comments