சீர் செய்யப்படும் பி.யூ சின்னப்பா நினைவிடம் !- வீடியோ

OneIndia_TamilPublished: August 2, 2018
Published: August 2, 2018

தமிழ் நாடகம் இசை மற்றும் திரைத்துறையில் தனக்கென்று ஒரு முத்ததிரை பதித்த பியூ சின்னப்பாவின் நினைவிடத்தை மணிமண்டபமாக திரைத்திரையுனர் மற்றும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்கள மற்றும் திரை ரசிகர்களின் கோரிக்கையாக உள்ளது.

தமிழ் திரையுலகிலும் சரி நாடக துறையிலும் சரி தனக்கென்று தனி இடம் பிடித்து கலைத்துறையின் சூப்பர் ஸ்டாராக இருந்தவர் தான் பி.யூ சின்னப்பா. இவர் புதுக்கோட்டையில் 5.5.1916 அன்று பிறந்தார். சிறு வயது முதல் நாடகம் மற்றும் இசைத்துறையில் தனது 1936ம் ஆண்டு சந்ததிரகாந்தா திரைப்படம் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமாகி நாடகம் மற்றும் திரைத்துறையில் அந்த காலகட்டத்தில் கோலோச்சி இருந்து வந்தார். அவரது திரைபடங்கள் அப்போதே 200 நாட்களுக்கும் மேல் ஓடியதாக திரை ரசிகர்கள் பெருமையுடன் குறுப்பிடுகின்றனர். மேலும் தான் சம்பாதித்த பணத்தை கொண்டு புதுக்கோட்டையில் சொத்துக்களை வாங்கி குவித்ததாகவும் இனி சொத்துக்களை வாஙக கூடாது என்று அன்றைய புதுக்கோடடை சமஸ்தானத்தை ஆண்ட மன்னர்கள் தடை விதித்ததாகவும் கூறப்படுகிறது
புகழின் உச்சியில் இருந்த பியூ சின்னப்பா 1951ம் ஆண்டு செப்..21ம் தேதி மண்ணைவிட்டு மறைந்தார். அவரது நினைவாக புதுக்கோட்டையில்இவரது பெயரில் இன்றும் இருக்கும் சின்னப்பா நகரில் சின்னப்பாவின் வீட்டில் நினைவாகமாக இன்றும் இருந்து வருகிறது.
இதன் பின்னர் அவரது சொத்துக்கள் பராமரிப்பின்றி பலர் அவரது சொத்துக்களை அபகரித்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இன்றும் தனது தாத்தாவின் சொத்துக்களை மீட்க பியூ சின்னப்பாவின் பேரன் மலையரசன் போராடி வருகிறார். தற்போது இவர் சென்னையில் மிகவும் வறுமையில் தான் உள்ளார் என்ற கருத்தும் கூறப்படுகிறது.
இவரது புகழை இன்றைய தலைமுறையினர் தெரிந்து கொள்ளும் வகையில் அவரது நினைவிடம தற்போது பராமிப்னிறி கிடக்கிறது. நினைவவிடத்திற்குள் சுவற்றில் விரிசல் விட்டு அதன் வழியாக மரங்கள் முளைத்து தற்போது பாழடைந்த நினைவிடமாக உள்ளது. மேலும் முட்புதர்கள் மண்டி நினைவகம் பாழடைந்து கிடக்கிறது. அவரது நினைவிடத்தை புனரமைப்பு செய்ய வேண்டும்; மேலும் அவரது நினைவகத்தை மணிமண்டபமாக கட்ட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலதரப்பிலிருந்தும் இன்றுமம் கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்றன.

des : It is the demand of social enthusiasts and screen fans that the screening of Tamil film music and screening of Biju Chinnapai in the film industry has to be done by the cinemas and the Tamil Nadu government.

Be the first to suggest a tag

    Comments

    0 comments