உணர்வால் ஒன்றான தமிழகம்- வீடியோ

OneIndia_TamilPublished: August 1, 2018Updated: August 2, 2018
Published: August 1, 2018Updated: August 2, 2018

உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதியை முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் அமைச்சர்கள் மட்டும் இன்றி பல்வேறு கட்சியினர் சந்தித்து நலம் விசாரித்து வருவது தமிழனுக்கு உள்ள ஒற்றுமையை வெளிப்படுத்துகிறது.

ஏதேனும் ஒரு சமுதாய பிரச்சணை என்றால் தமிழன் ஒன்று கூடி போராட்டம் நடத்துவதும் பிரச்சணைக்கு தீர்வு ஏற்படும் வரை தொடர்ந்து பாடுபடுவதும் நமது ஒற்றுமை எந்த அளவுக்கு உள்ளது என்பதை பல்வேறு சம்வங்கள் நிரூபித்து காண்பித்துள்ளோம். அதேபோல் தமிழனின் மனது பூ போன்றது. உயிருக்கு போராடுபவராக இருந்தாலும் சரி சாப்பாட்டுக்கு கஷ்டப்படுகிறவராக இருந்தாலும் சரி ஓடி சென்று உதவும் குணம் படைத்தவர்கள் தான் தமிழர்கள். அதனால் தான் இன்றுவரை தமிழன் தலை நிமிர்ந்து நிர்கிறான். கட்சிகளும் கருத்துகளும் வேறு… ஆனால் பிறப்பால் நான் தமிழன் என்பதை இன்று கலைஞரின் விஷயத்தில் வெட்ட வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சட்டசபையில் சட்டையை கிழித்து கொண்டாலும் நாற்காலிகளை வீசி ரகளையில் ஈடுபட்டாலும் உயிர் என்று வரும் போது ஓடி வந்து உதவுவதும் துக்கத்தில் பங்கேற்பதும் தான் தமிழனின் மரபு… பங்காளி சண்டையாலும் பந்தி சண்டையாலும் பாடையில் ஏற்றும் போது நெஞ்சு பதைத்து ஓடிவரும் தமிழனின் பதபதப்பு வேறு எவருக்கும் வராது என்பது தான் நிசப்பதம்… அது போல் தான் கருணாநிதி உடல் நிலை சரியில்லாமல் பாதிக்கப்பட்டுள்ளதை கேட்டு பதறி துடித்து வந்து பார்க்க ஓடி வந்த அதிமுகவினர் பாஜகவினர் என்று அனைத்து கட்சி கொள்கைகளை தாண்டி ஒடிவந்து விசாரிப்பதும் ஆறுதல் கூறுவதும் தமிழனின் மரபை யும் உணர்சிகளையும் வெளிபடுத்தியுள்ளது. எத்தனை சத்திகள் எங்களை தீண்டினாலும் உணர்வால் எங்களை பிரிக்க முடியாது என்பதற்கு இந்த சான்று ஒன்று போதாதா,,,,,,

Des : DMK leader Karunanidhi, who was admitted to hospital, was suffering from ill health and the Chief Minister and Deputy Chief Minister of Ministers are meeting with the various parties.

Be the first to suggest a tag

    Comments

    0 comments