கருணாநிதியின் நாடித்துடிப்பு சீராக உள்ளது- வீடியோ

OneIndia_TamilPublished: August 1, 2018Updated: August 2, 2018
Published: August 1, 2018Updated: August 2, 2018

கடந்த நான்கு நாட்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படுள்ளதாகவும் அவரின் நாடித்துடிப்பு நார்மலாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

திமுக தலைவர் கருணாநிதிக்கு கடந்த வாரம் முதல் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. கோபாலபுரம் வீட்டில் முதலில் அவருக்கு மருத்துவம் அளிக்கப்பட்டது. கருணாநிதியின் உடல் நிலை சற்று மோசமானதால் நள்ளிரவு அவர் ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் கருணாநிதியின் உடல்நிலை சற்று தொய்வு ஏற்பட்டதாகவும் மருத்துவர்களின் தீவிர சிகிச்சையால் பின்னர் மீண்டும் சரிசெய்யப்பட்டதாக மருத்துவமனையின் அறிக்கைகள் தெரிவித்தன. ஒருசில நேரங்களில் நாடித்துடிப்பு ஏற்ற இறக்கமாக இருந்து வந்தது. நேற்று முதல் கருணாநிதியின் நாடித்துடிப்பு நார்மலாக துடித்து வருவதாகவும் அவருக்கு வழங்கப்பட்டு வந்த செயற்கை சுவாச கருவிகள் அகற்றப்பட்டு தற்போது இயற்கையாக சுவாசித்து வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கடந்த 4 நாட்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கருணாநிதி பூரண குணமடைந்து வீடு திரும்பும் வரை மருத்துவமனை வளாகத்தை விட்டு செல்ல மாட்டோம் என்று அவரது தொண்டர்கள் அங்கேயே காத்து கிடக்கின்றனர். கருணாநிதியின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால் தொண்டர்கள் மகிழ்ச்சியடைந்துள்னர். தமிழக அரசியல் தலைவர்கள் மட்டும் இன்றி தேசிய தலைவர்களும் மருத்துவமனைக்கு சென்று கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

DMK leader Karunanidhi has been admitted to hospital for the past four days and said his pulse was in the form of an infection.

Be the first to suggest a tag

    Comments

    0 comments