செல்போனில் தங்கம் கடத்தல்- வீடியோ

OneIndia_TamilPublished: August 1, 2018
Published: August 1, 2018

துபாயில் இருந்து செல்பேனில் தங்கத்தை மறைத்து கடத்தி வந்ததை சுங்க இலாகா அதிகாரிகள் கண்டுபிடித்து கடத்தலில் ஈடுபட்டவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

துபாயில் இருந்து மதுரைக்கு வரும் தனியார் விமானத்தில் தங்கம் கடத்தி வருவதாக சுங்க இலாகா அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அதிகாரிகள் சம்மந்தப்பட்ட விமானத்தில் பயணம் செய்த பயணிகளிடன் உடமைகளை தீவிரமாக சோதனை செய்தனர். அப்போது பயணி ஒருவர் செல்போனில் தங்கத்தை மறைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் கடத்திய நபரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். வெளி நாடுகளில் இருந்து மதுரைக்கு வரும் விமானங்களில் கடந்த சில மாதங்களாக தங்கம் கடத்தப்பட்டு வருவதும் அவற்றை சுங்க இலாக்கா அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் தொடர்கதையாகி வருகிறது.

Des : Customs officials detained and hijacked a hijacker hiding gold from cellphone in Dubai

Be the first to suggest a tag

    Comments

    0 comments